வரலாற்றில் முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்து தந்தைக்கும் முஸ்லிம் தாய்க்கும் பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்..!
வரலாற்றில் முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்து தந்தைக்கும் முஸ்லிம் தாய்க்கும் பிறந்த குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்..!
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் உள்ள சட்டத்திட்டங்களின்படி ஒரு முஸ்லிம் ஆண்மகன் பிறமதத்தை சேர்ந்த பெண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி உண்டு. அதேவேளையில், ஒரு முஸ்லிம் பெண் பிறமதங்களை சேர்ந்த ஆண்களை திருமணம் செய்துகொள்ள அனுமதி கிடையாது
இந்நிலையில், இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த கிரண் பாபு என்பவர் அதே மாநிலத்தை சேர்ந்த சனம் சாபூ சித்திக் என்ற முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், பிழைப்புக்காக ஐக்கிய அமீரக நாடுகளின் தலைநகரான அபுதாபி நகருக்கு தனது மனைவியுடன் வந்து இங்கு குடியேறினார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்குள்ள ஒரு மருத்துவமனையில் இந்த தம்பதியருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனால், முஸ்லிம் தாய்க்கு பிறந்த அந்த குழந்...









