இயக்குனர் அமீர் மீது வழக்கு பதியப்பட்டது தனி மனித சுதந்திரத்தை பறிக்க திட்டமிட்ட சதி..! TMJA கண்டனம்
இயக்குனர் அமீர் மீது வழக்கு பதியப்பட்டது தனி மனித சுதந்திரத்தை பறிக்க திட்டமிட்ட சதி..!
தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் கண்டனம்(TMJA)
தமிழகத்தில் நடைபெறும் “தொடர் போராட்டங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கா?, அரசியல் காரணங்களுக்கா?” என்ற தலைப்பில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பில் (08.06.2018) கோவையில் வட்டமேசை விவாத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் திமுக சார்பில் திரு. டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., பாஜக சார்பில் திருமதி தமிழிசை சவுந்தரராசன், சிபிஐ (எம்) சார்பில் தோழர். பாலகிருஷ்ணன், அஇஅதிமுக சார்பில் திரு. செம்மலை எம்.எல்.ஏ., தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் திரு. ஞானதேசிகன், கொங்கு இளைஞர் பேரவை சார்பில் திரு. உ. தனியரசு எம்.எல்.ஏ., இந்திய குடியரசுக் கட்சி சார்பில் திரு. செ.கு. தமிழரசன் இவர்களோடு இயக்குநர் திரு.அமீர் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்து ...









