நல்ல கருத்துள்ள சின்ன பட்ஜெட் படங்களை நசுக்கும் 5 பேரின் அராஜகம் – ஆவேசமாகும் இயக்குனர் சுரேஷ் காமாட்சி
“எனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் நேற்று (அக்-11) வெளியாக இருந்த ‘மிக மிக அவசரம்’ திரைப்படம் சொன்னபடி வெளியாகவில்லை..
பெண் காவலர்களின் வலியைப் பற்றி பேசும் நல்ல படம் என விநியோகஸ்தர்களே பாராட்டிய இந்தப்படம் ஏன் வெளியாக முடியாமல் போனது..?
கடந்த 15 நாட்களுக்கு முன்பே போதுமான தியேட்டர்கள் கிடைக்கும் என உறுதி செய்யப்பட்ட பின்னரே ரிலீஸ் தேதியை முடிவு செய்து விளம்பரங்கள் செய்ய ஆரம்பித்தோம்..
ஆனால் எங்களுக்கு பிறகு வந்த. நேற்றைய தேதியில் ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்ட படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தியேட்டர்களை ஒதுக்கியுள்ளார்கள்..
ஏனென்றால் தியேட்டர் அதிபர்களில் சிலரே சம்பந்தப்பட்ட அந்தப் படங்களின் தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் செய்திருக்கிறார்கள்.. அதனாலேயே அந்த படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்.
அதுமட்டுமல்ல வெளி மாநில படங்களுக்கும் கூட அதிக மு...









