ஜல்லிக்கட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் – அரசுக்கு மிருகநல வாரியம் கடிதம்
ஜல்லிக்கட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - தமிழக அரசுக்கு மிருகநல வாரியம் கடிதம்
ஜல்லிக்கட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தேசிய மிருகநல வாரியம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக தேசிய மிருகநல வாரியத்தின் செயலாளர் எம்.ரவிக்குமார், தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஐ.ஜி.க்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
* அரசு அறிவித்துள்ள இடங்களில் மட்டுமே ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்.
* ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் ஜல்லிக்கட்டு தொடர்பான நிகழ்ச்சிகள் மிருகவதை தடை சட்டத்தின் கீழ் வரையறுத்துள்ளபடி பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை கலெக்டர்கள் உறுதிபடுத்தி கொள்ள வேண்டும்.
* ஜல்லிக்கட்டு பற்றிய தகவல் மற்றும் பதிவு செய்யப்பட்ட காளைகள் குறித்த தகவல்களை ஒரு மாதத்துக்கு முன்பே மாநில மிருகநல வாரியத்துக்கு கலெக்டர்கள் தெரிவிக்க...









