அமெரிக்காவின் முதன் பெண்மணி அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன்
அமெரிக்காவின் முதன் பெண்மணி அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் வரலாற்று பெருமைகளைப் பெறும் அமெரிக்காவின் முதன் பெண்மணி ஆவார்.
மனைவிமார்கள் தங்களது கணவர்களை ஆபத்துகளில் இருந்து பாதுகாப்பார்கள். ஜில் பைடனும் அப்படிப்பட்ட பெண்மணிகளில் ஒருவர்தான். சில தருணங்களில் சீக்ரெட் ஏஜெண்டைப் போல, அசம்பாவிதங்களில் இருந்து ஜோ பைடனைக் காப்பாற்றியவர் ஜில் பைடன். அமெரிக்க மக்கள் இதுபோன்ற காட்சிகளை பலமுறை கண்டிருக்கிறார்கள்.
ஜில் பைடன், ஜோ பைடனின் இரண்டாவது மனைவி. தனது காதல் மனைவியும் மகளும் விபத்தில் மரணமடைந்த சில ஆண்டுகளுக்குப் பிறகு 1978-ஆம் ஆண்டில் ஜில் பைடனை ஜோ பைடன் திருமணம் செய்து கொண்டார். வாழ்க்கையை மீட்டுக் கொடுத்தவர் ஜில் என்று ஜோ பைடன் பலமுறை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருக்கிறார். தாயை இழந்த இரு மகன்களையும் அன்புகாட்டி வளர்த்த விதம் குறித்தும் ...









