சூர்யாவுடன் இணைந்து கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவுள்ளதாக கே.வி. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தற்போது சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே என்கிற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குநர் கே.வி. ஆனந்துடன் மீண்டும் இணைய உள்ளார். இந்தப் படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து மோகன்லால் நடிக்கவுள்ளதாக கே.வி. ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கே.வி.ஆனந்த் இயக்க உள்ள படத்தில் முதலில் சூர்யாவுடன் இணைந்து அமிதாப்பச்சன் நடிக்க இருப்பதாக வதந்திகள் பரவியது. இந்நிலையில் தற்போது மோகன்லால் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் மோகன்லால் இந்த வார தொடக்கத்தில் இயக்குனரை சந்தித்ததாகவும், அதில் ஒரு பகுதியாக நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயன், மாற்றான் படங்களுக்குப் பிறகு சூர்யா - கே.வி. ஆனந்த் ஆகிய இருவரும் மீண்டும் இணைகிறார்கள். இந்த படத்தின் மூலம் சூர்யா மற்றும் மோகன்லால் ரச...
அதிக மதிப்பெண் பெற்றும்கூட நீட் தேர்வினால் மருத்துவ படிப்புக்கு செல்ல முடியாமல் போராடி உயிர்விட்ட அனிதாவின் வாழ்க்கை ஏற்கனவே சினிமா படமாக தயாராகி வருகிறது. அனிதா கதாபாத்திரத்தில் ஜுலி நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்திலும் அனிதா காட்சி இடம்பெறுகிறது. இந்த படத்தில் வரும் தெருவிளக்கு என்ற பாடலில் இந்த காட்சி வருகிறது. தெருவிளக்கு வெளிச்சத்துல, நாங்க முன்னேறுவோம் என்று தொடங்கும் வரிகளுக்கு பின்னணியில் அனிதா படம் காட்டப்படுகிறது. மும்பை தாராவி பகுதியில் அனிதாவின் சுவரொட்டியை ஒட்டி வைத்து ‘டாக்டர் அனிதா, தமிழர்கள், நீட் தேர்வுக்கு எதிரானவர்கள்’ என்று வாசகத்தை அதில் குறிப்பிட்டு உள்ளனர். மும்பை விழித்தெழு இயக்கம் என்றும் அந்த சுவரொட்டியின் கீழ் எழுதி உள்ளனர்.
நெல்லையில் இருந்து சென்று தாராவி பகுதியில் தாதாவாக மாறி அங்குள்ள தமிழ் மக்களுக்காக போராடுபவர் பற்றிய படமாக க...
சென்னை வடபழனியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த சினிமா படத்தொடக்க விழாவில் இயக்குனர் பாரதிராஜா கலந்துகொண்டு பேசினார்.
அப்போது பாரதிராஜா, ‘இந்து கடவுளான பிள்ளையாரை இறக்குமதி கடவுள் என்று பேசிய கவிஞர் வைரமுத்துவுக்கு தலைகுனிவு ஏற்படுத்துவோரின் தலையை எடுக்கவும் தயங்க மாட்டோம்’ என்று ஆவேசமாக பேசினார்.
இதுகுறித்து இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த வி.ஜி.நாராயணன் என்பவர் இந்து கடவுளை பாரதிராஜா அவமதித்து விட்டதாக வடபழனி போலீசில் புகார் செய்தார்.
ஆனால் புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனையடுத்து பாரதிராஜா மீது வழக்குப்பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிடுமாறு சென்னை ஐகோர்ட்டில் வி.ஜி.நாராயணன் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த பின் இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து வடபழனி போலீசார் இயக்குனர் பாரதிராஜா மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர்....
திரைத்துறையில் மட்டுமல்ல..எல்லாத் துறையிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கிறார்கள் - காலா ஹீரோயின் பளீச்
71 வது கேன்ஸ் திரைப்படவிழாவில் காலா பட நடிகை ஹூமா குரேஷி கலந்து கொண்டு அவரது சொந்த அனுபவங்கள் ,குறித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
"இந்தியாவிலும் உலகின் மற்ற இடங்களிலும் பெண்கள் துன்புறுத்துதலுக்கு எதிராக பேசும் அமைப்பு உருவாகி விட்டது.. பெண் அவளுடைய அறநெறி பற்றி, அவள் அணிந்திருக்கு ஆடைகள் பற்றியும் அத்தகைய அனைத்து விஷயங்கள் குறித்து நான் நியாயமற்றது என்று நினைக்கிறேன் "
சிறுமிகள் இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யபடும் சம்பவங்கள் ஒரு பெரிய மாற்றத்திற்கான தேவையை காட்டுகின்றன இதற்கு "சட்டங்கள் மட்டுமே உதவ முடியாது, மாற்றம் மிகவும் ஆழ்ந்ததாக இருக்க வேண்டும். மேலும் தன்னார்வமாகவும் இருக்க வேண்டும்.
"பெண்களை படுக்கைக்கு அழைப்பது திரைத்துறையில் மட்டுமல்ல...
இசையமைப்பாளராக இருந்து ‘நான்’ படம் மூலம் ஹீரோவாக மாறியவர் விஜய் ஆண்டனி. ‘நான்’, ‘சலீம்’, ‘பிச்சைக்காரன்’ என்று வரிசையாக வெற்றிப் படங்களாக கொடுத்ததைத் தொடர்ந்து முன்னணி நடிகர் ஆனார். எதிர்மறை தலைப்புகளையே தொடர்ந்து தனது படங்களுக்கு வைத்தார்.
இந்தியா - பாகிஸ்தான், எமன், சைத்தான் என்று வரிசை நீண்டது. அவரது நடிப்பில் காளி படம் வருகிற 18-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. அவர் தற்போது ‘திமிரு பிடிச்சவன்’ என்ற தலைப்பிலும் ‘கொலைகாரன்’ என்ற தலைப்பிலும் நடித்துவருகிறார்.
அடுத்து ‘திருடன்’ என்ற தலைப்பில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ‘வாய்மை’ படத்தை இயக்கிய அ.செந்தில்குமார் இயக்கவிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க வெளிநாடுகளில் நடக்கும் கதை. இந்த படத்துக்காக விஜய் ஆண்டனியை ஸ்டைலிஷாக மாற்றவிருக்கிறாராம் செந்தில்குமார்....
சேலம் ஊத்துமலை முருகன் கோவிலில் சரணம் பல்லவி என்ற படப்பிடிப்பு தொடக்க விழா இன்று பூஜையுடன் தொடங்கியது.
இதில் கதாநாயகனாக சேலத்தை சேர்ந்த ரிஸ்வான், கதாநாயகியாக பிரியங்கா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தை சேலத்தை சேர்ந்த சாய் இளவரசன் இயக்குகிறார். இதில் வில்லனுடைய அக்காவாக பழம்பெரும் நடிகை கே.ஆர். விஜயா நடிக்கிறார்.
மேலும் திருமணம் செய்யாமல், மக்களுக்கு சேவை செய்யும் வேடத்திலும், காதல் ஜோடியை சேர்த்து வைக்கும் முக்கிய கேரக்டரிலும் நடிக்கிறார்.
மொத்தம் 40 நாட்கள் சேலம், ஏற்காடு, ஊத்துமலை முருகன் கோவில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது. இதில் 4 பாடல்கள், 4 சண்டை காட்சிகள் இடம் பெறுகின்றன.
இன்று ஊத்துமலை முருகன் கோவிலில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட கே.ஆர்.விஜயா நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த படத்தின் கதை வித்தியாசமாக இருப்பதால் நான் நடிக்கிறேன். உங்கள...
தனுஷின் முதல் ஹாலிவுட் படமான `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' உலகளவில் பிரபலமான கேன்ஸ் படவிழாவில் திரையிடப்பட உள்ளது. அதற்காக நடிகர் தனுஷ் பிரான்ஸ் சென்றுள்ளனர்.
ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற நாவலை தழுவி காமெடி படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
உலக சினிமா சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை பெரும்பாலான நாடுகளில் சோனி பிக்சர்ஸ் கைப்பற்றியிருக்கிறது.
வருகிற மே 30-ஆம் தேதி இந்த படம் பிரான்சில் ரிலீசாக இருக்கிறது. அதே வாரத்தில் இந்தியாவிலும் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாக...
சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் `என்.ஜி.கே.', படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக கே.வி.ஆனந்த்துடன் இணையவிருக்கிறார்.
இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோகன் லால் கடைசியாக தமிழில் விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், என்.ஜி.கே. படத்தை முடிந்த பிறகு சூர்யா கே.வி.ஆனந்த் படத்தில் இணையவிருக்கிறார்.
லைகா புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற இருக்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க...
ரஜினிகாந்த் நடித்துள்ள ‘காலா’ படத்தின் பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் பிரமாண்டமாக நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், ரசிகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
ஒட்டுமொத்தமாக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் சென்னை வந்திருந்ததனர். அவர்களுடன் நேற்று சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் இதில் 32 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்....