டெல்லியில் பிரதமர் மோடி விழாவுக்கு முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை..!
டெல்லி மெஜந்தா லைன் பிரிவில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி, வரும் 25 ஆம் தேதி துவக்கி வைக்கிறார். இந்த விழாவுக்கு கெஜ்ரிவாலுக்கு அழைப்பு இல்லை.
தலைநகர் டெல்லியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் மெட்ரோ ரயில் பாதையை விரிவாக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அந்த வகையில், ஜானக்புரியில் இருந்து நொய்டா வரை 12.5 கி.மீட்டர் தூரம் வரை மெஜந்தா பிரிவில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ ரயில்களை இயக்கும் திட்டப்பணிகள் நடைபெற்று வந்தன. மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் முடிந்த நிலையில், வரும் டிசம்பர் 25 ஆம் தேதியன்று பிரதமர் மோடி, இந்த பாதையில் ரயில் பாதையை துவக்கி வைக்கிறார். இதற்கான முன்னேற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று நடைபெறும் துவக்க ...









