விமானங்களில் பயணிகள் செல்போன்கள் மற்றும் இணையச் சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் -டிராய் பரிந்துரை
விமானங்களில் பயணிகள் செல்போன்கள் மற்றும் இணையச் சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு டிராய் பரிந்துரைத்துள்ளது.
தற்போது விமானங்களில் செல்போன்கள் பயன்படுத்த பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. பல்வேறு பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, இந்த விதிமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நிலையில், விமானப் பயணங்களின்போது செல்போன் சேவைகளை பயன்படுத்த அனுமதிக்கும் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குமாறு, டிராயிடம் மத்திய தொலைத்தொடர்புத் துறை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோரியிருந்தது. இதையடுத்து, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் மற்றும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகளைக் கேட்டறிந்த டிராய், தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளது.
அதில், விமானப் பயணங்களின்போது செல்லிடப்பேசி மற்றும் இணையச் சேவையை பயன்படுத்த பயணிகளை அனுமதிக்கலாம் என்று பரிந்துர...








