“பொன்னியின் செல்வன்’ படம் சந்திரலேகா போல் பிரமாண்டமாக உருவாவதற்கு முக்கிய காரணம் சுபாஸ்கரன் சார் தான் – ஜெயம் ரவி
பொன்னியின் செல்வன் புத்தகத்தை திரைப்படமாக எடுப்பதற்கு பல ஜாம்பவான்கள் முயற்சித்தும் சாத்தியமாக்கி இருப்பது மணி சார்..” - ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி பேசியபோது,
உங்கள் அனைவரின் அன்பிற்கு நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், நான், கார்த்தி, ஜெயராம் சார் மூவரும் சேர்ந்து நடிக்கும் போது மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? மக்களின் ஆரவாரம் எப்படி இருக்கும்? மக்கள் எப்படி ரசிப்பார்கள் என்று சிந்தித்துக் கொண்டு தான் நடித்தோம். ஆனால், இன்று சில காட்சிகளுக்கு நீங்கள் தந்த எதிர்வினைகள் ஒன்றே போதும். மிகவும் சந்தோஷமாக உள்ளேன்.
ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளனர். நான் மிகவும் மதிப்பது தமிழ் ரசிகர்களை தான். ஏனென்றால், உலக சினிமா பார்க்கும் ரசிகர்களை நான் கடந்து வந்துள்ளேன். அவர்கள் அனைவரும் நல்ல படத்திற்கு, நல்ல இயக்கத்திற்கு, நல்ல இசைக்கு என்று தனி ...








