குறுக்கு வழியில் பதவி பிடித்த பார்த்திபன் நிர்வாகத்தை குலைத்த விஷால் கொந்தளிக்கும் சுரேஷ் காமாட்சி
விஷால் தரப்புக்கும் அதன் எதிரணிக்கும் முட்டல் மோதல் நடந்ததுதான் கடந்தவார பரபரப்பு.அதன் தொடர்சியாக விளக்கம் கேட்டு 27 தயாரிப்பாளர்களுக்கு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார் தயாரிப்பாளர் சங்க தலைவர்.அதற்கும்,பார்த்திபன் எப்படி பதவிக்கு வந்தார் என்பது குறித்தும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஏகப்பட்ட கேள்விகளை முன் வைத்து வெளுத்து வாங்கியிருக்கிறார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தை பூட்டிவிட்டோம் என 27 பேருக்கு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது திரு விசால் தலைமையிலான குறைந்த பட்ச செயற்குழு.பாதிபேர் ராஜினாமா செய்துவிட்டபின் அதில் இருப்பது குறைந்த பட்சம்தானே?இந்த நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டபின் எதுவும் முறைப்படி நடைபெறவில்லை.பொதுக்குழு முறையாக நடக்கவில்லை.பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய தீர்மானங்களை தமக்கு வேண்டியவர்களை வைத்துக்கொண்டு செயற்குழுவில் நிறைவேற்றும் நிர்வாகம்...









