சனிக்கிழமை, நவம்பர் 14
Shadow

HOME SLIDER

மாஸ்க் போட மறுத்த பயணி… விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திருப்பிய விமானி!

மாஸ்க் போட மறுத்த பயணி… விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திருப்பிய விமானி!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
மாஸ்க் போட மறுத்த பயணி... விமானத்தை மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திருப்பிய விமானி! அமெரிக்காவின் மியாமி நகரில் இருந்து லண்டன் நோக்கி நேற்று அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் பயணித்த ஒரு பயணி, முக கவசம் அணிய மறுத்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பயணிகள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என விமான பணியாளர்கள் எடுத்துக் கூறியும் அந்தப் பயணி கேட்கவில்லை. பயணி தனது நிலைப்பாட்டில் பிடிவாதமாக இருந்ததால், விமானி உடனடியாக விமானத்தை மியாமி விமான நிலையத்திற்கு திருப்பினார். மியாமி விமான நிலையத்தை தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்க அனுமதி பெற்றார். விமானம் தரையிறங்கியதும், முக கவசம் அணிய மறுத்த பயணியை போலீசார் கீழே இறக்கி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவரது பயண அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், சம்பந்தப்பட்ட...
தூங்கிக்கொண்டிருந்த ராணுவ வீரர்கள் 11 பேரை சுட்டுக் கொன்ற ஐ.எஸ். அமைப்பினர்!

தூங்கிக்கொண்டிருந்த ராணுவ வீரர்கள் 11 பேரை சுட்டுக் கொன்ற ஐ.எஸ். அமைப்பினர்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தூங்கிக்கொண்டிருந்த ராணுவ வீரர்கள் 11 பேரை சுட்டுக் கொன்ற ஐ.எஸ். அமைப்பினர்! ஈராக் நட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் ராணுவ முகாம் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். தலைநகர் பாக்தாத்திற்கு வடக்கே மலைப் பகுதியில் உள்ள முகாமில் ராணுவ வீரர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  கண்மூடித்தனமாக பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில், 11 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். தியாலா மாகாணம், பாகுபாவின் வடக்கே அல்-அசிம் மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாக்தாத்திற்கு வடக்கே 120 கிலோ மீட்டர் தொலைவில் நடந்த இந்த கொடூரமான தாக்குதல், சமீபத்திய மாதங்களில் ஈராக் ராணுவத்தை குறிவைத்து நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் ஆகும்....
ஆஸ்கர் பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம்!

ஆஸ்கர் பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஆஸ்கர் பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம்! உலகின் மிகப்பெரிய சினிமா விருதுகளுள் ஒன்று ஆஸ்கர் விருது. இந்த விருதை வெல்வது படைப்பாளிக்கு மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. பல நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கும் படங்களுக்கு விருது வழங்கி ஆஸ்கர் கௌரவிக்கப்படும். இந்த விருதுகளுக்கு பல படங்கள் போட்டியிட்டு அதில் சில படங்களே தேர்ந்தெடுக்கப்படும். டி.ஜே. ஞானவேல் இயக்கித்தில் சூர்யா, லிஜிமோல் ஜோஸ், மணிகண்டன், ரஜிஷா விஜயன் போன்ற பலரும் நடித்து அனைவரின் மத்தியில் பெரிதும் வெற்றிப்பெற்ற ஜெய்பீம் திரைப்படம், 90களில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான தகுதி பட்டியலில் ஜெய்பீம் திரைப்படம் இடம் பெற்றுள்ளது. இப்பட்டியலில் உலகளவில் பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள 276 படங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், சூர்யா ந...
ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர்!

ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசர்! காமெடி நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சந்தானம். இவர் நடிப்பில் டிக்கிலோனா என்ற திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது இவர் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் கடந்த 2019 ஆண்டு வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் தமிழ் ரீமேக்காகும். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை மனோஜ் பீதா இயக்கி வருகிறார். ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தின் டீசரை நடிகர் ஜீவா மற்றும் நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளனர். நடிகர் சந்தானத்தின் பிறந்தநாளான இன்று அப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இதன் டிசர் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது....
பா.இரஞ்சித்தின் ‘ரைட்டர்’ படத்தை வாங்கிய பிரபல OTT நிறுவனம்!

பா.இரஞ்சித்தின் ‘ரைட்டர்’ படத்தை வாங்கிய பிரபல OTT நிறுவனம்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
    அட்டக்கத்தி, மெட்ராஸ், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களை இயக்கிய பா.இரஞ்சித் தயாரிப்பாளராகவும் பயணித்து வருகிறார். இவர் தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலக போரின் கடைசி குண்டு போன்ற படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. அதன் பிறகு இவர் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப்ராங்க்ளின் ஜேக்கப் 'ரைட்டர்' படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் சமுத்திரக்கனி, திலீபன், இனியா, சுப்ரமணிய சிவா ஆகியோர் நடித்திருந்தனர்   ஒரு நேர்மையான போலீசுக்கு சமூகத்திலும் அலுவலகத்திலும் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி பேசிய இப்படம் வெளியாகி பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை தெலுங்கின் முன்னணி ஓடிடி நிறுவனமான 'ஆஹா' கைப்பற்றியுள்ளது. பிரபல தயாரிப்பாளரும் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையுமான அல்லு அரவிந்த் நடத்தும் 'ஆஹா' ஓடிடி தளம் தமிழில் வரவுள்ளது. ...
திடீரென திருமணம் செய்து கொண்ட நடிகர் வெற்றி

திடீரென திருமணம் செய்து கொண்ட நடிகர் வெற்றி

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
  நடிகர் வெற்றியின் திடீர் திருமணம் தமிழ் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் வெற்றி. இவர் 8 தொட்டாக்கள், ஜீவி, வனம் போன்ற சில படங்களில் நடித்திருந்தார். இவர் வித்யாசமான கதைகளை தேர்தெடுத்து நடித்து அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது பிக்பாஸ் ஷிவானி நடிக்கும் பம்பர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.   இந்நிலையில் இவர் திடீரென ரகசிய திருமணம் செய்துள்ளார். இந்த திருமணம் திருநெல்வேலியில் நடந்துள்ளது. திடீரென நடந்த இவரின் திருமணத்தால் அவரின் ரசிகர்களையும் சினிமா துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கொரானா 3ம் அலையின் தாக்கம், ஒமைக்ரான் பரவல் , கட்டுப்பாடுகள் காரணமாக யாருக்கும் தகவல் சொல்லாமல் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள திருமனம் நடந்துள்ளது. சென்னையில் வரவ...
‘புஷ்பா’ உள்ளிட்ட கேங்ஸ்டர் படங்களை பார்த்து கொலை குற்றத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்கள்

‘புஷ்பா’ உள்ளிட்ட கேங்ஸ்டர் படங்களை பார்த்து கொலை குற்றத்தில் ஈடுபட்ட 3 சிறுவர்கள்

HOME SLIDER, NEWS, செய்திகள்
அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. இந்த படத்தை பார்த்துவிட்டு, தாங்களும் குற்ற உலகில் பிரபலம் அடைய வேண்டும் என கருதி 3 சிறுவர்கள் ஒருவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் ஜகாங்கீர்புரி பகுதி மருத்துவமனையில் ஷிபு என்ற நபர் கத்தி குத்து காயங்களுடன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தபோதே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் 3 சிறுவர்கள் சேர்ந்து ஷிபுவை கத்தியால் குத்தியது சிசிடிவி காணொளி மூலம் தெரிய வந்தது. அந்த சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, தாங்கள் புஷ்பா உள்ளிட்ட கேங்ஸ்டர் படங்களை பார்த்து, அதில் வரும் கதாபாத்திரங்களை போல ஆக வேண்டும் என விரும்பியதாகவும், இதனால் ஒருவரை கொலை செய்து அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிரபலம் அடைய இருந்ததாகவும் தெரி...
பிரபல நடிகை வீட்டில் துணிகளை திருடிய தனுஷ்!

பிரபல நடிகை வீட்டில் துணிகளை திருடிய தனுஷ்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, செய்திகள், நடிகைகள்
    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடிகை நிக்கி கல்ராணி. இவர் டார்லிங், ராஜவம்சம் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினியாக நடித்தவர். கடந்த சில தினங்களுக்கு முன் நடிகை நிக்கி கல்ராணி, அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் `தன்னுடைய வீட்டில் வேலைப் பார்ப்பதற்காக தனியார் ஏஜென்ஸி மூலம் தனுஷ் என்பவரை நியமித்திருந்தாகவும். கடந்த ஜனவரி 11ஆம் திகதி தனுஷ், சில பொருள்களை எடுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.   அதன்பிறகு வீட்டில் சோதனை நடத்திய பிறகு விலை உயர்ந்த கேமரா, 40 ஆயிரம் ரூபாய் உள்பட சில பொருள்கள் காணவில்லை. எனவே தனுஷிடம் விசாரணை நடத்தி திருட்டுப்போன பொருள், பணத்தை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் அண்ணாசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேல...
2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு

2022 டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியீடு

HOME SLIDER, sports, விளையாட்டு செய்திகள்
  2022 ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. மொத்தம் 45 போட்டிகள் கொண்ட இந்த தொடர், வரும் அக்டோபர் 16ந் தேதி தொடங்கி நவம்பர் 13ந்தேதிவரை இந்த போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகின்றது. அடிலெய்டு, பிரிஸ்பேன், கீலாங், ஹோபார்ட், மெல்போர்ன், பெர்த் மற்றும் சிட்னி உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரையிறுதிப் போட்டிகள் சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும், அடிலெய்டு ஓவல் மைதானத்திலும் முறையே நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறும்.  இறுதிப் போட்டி நவம்பர் 13ந்தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. போட்டியை நடத்தும் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாட தகுதி...
தந்தை சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு –  உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

தந்தை சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

HOME SLIDER, NEWS, செய்திகள்
    தந்தை சொந்தமாக சம்பாதித்த சொத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு என்ற சட்டம் 1956-ம் ஆண்டுக்கு முன்னரும் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 1956-ம் ஆண்டு, இந்து வாரிசு உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி,  மூதாதையரின் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பங்கு உண்டு என இருந்தது இதன்பின் கடந்த 2005-ம் ஆண்டு இந்து வாரிசு உரிமை சட்டம் பிரிவு 6-ல்,  திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, மூதாதையர்களின் சொத்தில் மகள்களுக்கும் சம உரிமை உண்டு என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தை சேர்ந்த அருணாச்சலா என்பவர் தொடர்ந்த வழக்கு ஒன்றில், ’1956-ம் ஆண்டுதான் வாரிசு உரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்பாகவே குடும்ப தலைவர் இறந்து விட்டால், அவருடைய ஆண் வாரிசுகளுக்கு மட்டும் தான் சொத்து செல்லுமா அல்லது மகள்களுக்கும் சொத்தில் உரிமை உண்டா என்பது...