அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிகவுக்கு கல்தா?!
அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிகவுக்கு கல்தா?!
தமிழகத்தில் மிகவும் வலுவான கட்சிகளில் முதன்மையாக உள்ள கட்சி அதிமுக. அக்கட்சியின் தலைமையில் தேர்தல் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இதில், பாஜக, தமாகா, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் மற்றும் பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், இந்த கூட்டணியில் இருந்து ஒரு கட்சியை சைலண்டாக கழட்டிவிட முடிவு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
சென்னை வந்த மத்திய உள் துறை அமைச்சரும், பாஜகவின் முன்னாள் தேசியத் தலைவருமான அமித் ஷா, அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பாஜக -அதிமுக கூட்டணியை உறுதிபடுத்தினார்.
ஆனால், கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் விஜயகாந்த் அவதிப்பட்டு வந்த விஜயகாந்தை, கூட்டணிக் கட்சித் தலைவர் என்ற ரீதியில், மத்திய அமை...









