ரஜினி கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நியமனம்
அரசியலில் குதித்துள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் ஒவ்வொரு மாவட்டமாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். சென்னைக்கு உறுப்பினர்களை வரவழைத்து அவர்களுக்கு நேர்காணல் நடத்தி நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே அமெரிக்காவில் இருந்து திரும்பிய ரஜினி கட்சியின் பெயரை எப்போது அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் தொடர்பான புகார்களை விசாரிக்க மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ளது:-
ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களின் ஒழுக்கம், கட்சி தொடர்பான புகார்களை விசாரிப்பதற்காக ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் டாக்டர் இளவரசன், ராமதாஸ், என்.கோவிந்த ராஜ், கே.கே.துரைராஜ், பரமேஸ்வரன் பகவான், வி.எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகிய 6 ப...








