ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரவரிசை – இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-ம் இடம்!

சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரவரிசை – இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-ம் இடம்!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரவரிசை - இந்திய கேப்டன் விராட் கோலி தொடர்ந்து 5-ம் இடம்! டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில், பேட்ஸ்மேன்களில் இந்திய கேப்டன் விராட் கோலி 5- வது இடத்திலும், ரிஷப் பண்ட் மற்றும் ரோகித் சர்மா (747 புள்ளிகள்) கூட்டாக இணைந்து 6-வது இடத்திலும் நீடிக்கின்றனர். ஜூன் 18 முதல் நியூசிலாந்திற்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கோலி இந்தியாவை வழிநடத்துவார். ஒரு இடத்தைப் பெற்ற பந்த் மற்றும் ரோகித் தலா மதிப்பீட்டு புள்ளிகளைப் பெற்றுள்ளனர். பந்துவீச்சாளர் தரவரிசையில் தமிழக வீரர் அஸ்வின் மட்டும் 2-வது இடத்தில் நீடித்து, டாப் 10 வரிசையில் இருக்கும் ஒரே இந்திய வீரர் ஆவார். அதேபோல் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா 2-வது இடத்திலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4-வது இடத்திலும் தொடர்ந்து நீடிக்...
தர்பூசணிகளை ராணுவத்துக்கு இலவசமாக வழங்கிய விவசாயி!

தர்பூசணிகளை ராணுவத்துக்கு இலவசமாக வழங்கிய விவசாயி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தர்பூசணிகளை ராணுவத்துக்கு இலவசமாக வழங்கிய விவசாயி! ஜார்கண்டை சேர்ந்த விவசாயி ரஞ்சன் குமார் மாடோ (வயது25). பட்டதாரியான இவர், விரும்பியபடி வேலை அமையாததால், 25 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்ய ஆரம்பித்தார். இவரது பண்ணைக்கு அருகில் இருந்து ராணுவ அதிகாரிகள், வீரர்கள் வந்து விளைபொருட்களை வாங்கி செல்வது உண்டு. ரஞ்சன் தற்போது 6 ஏக்கர் நிலத்தில் பயிரிட்ட தர்பூசணி பழங்களை அறுவடை செய்தார். ஆனால் ஊரடங்கு காரணமாக பழங்களை விற்பனை செய்ய முடியவில்லை. இந்த நிலையில் தேசத்திற்காக போராடும் ராணுவ வீரர்களுக்கு அந்த பழங்களை விவசாயி ரஞ்சன் இலவசமாக வழங்கினார். அவர் குறிப்பிட்ட அளவு பழங்களை ராணுவத்திற்கு இலவசமாக வழங்க, மீதி பழங்களை ராணுவ பிரிவினர், சந்தை விலையில் விவசாயியிடம் இருந்து விலைக்கு வாங்கிக்கொண்டனர்....
50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் – ஜோ பைடன்!

50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் – ஜோ பைடன்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
50 கோடி கொரோனா தடுப்பூசிகளை 92 நாடுகளுக்கு நன்கொடையாக அனுப்ப உள்ளோம் - ஜோ பைடன்! 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி 92 நாடுகளுக்கு வழங்குவது குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக, வெள்ளை மாளிகையில் அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: அமெரிக்கா 50 கோடி பைசர் தடுப்பூசிகளை வாங்கி அதை குறைந்த மற்றும் நடுத்தரத்துக்கும் குறைவான வருவாய் உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் என 92 நாடுகளுக்கு வழங்க உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மூலம் பல மில்லியன் நபர்களின் உயிர்கள் காப்பாற்றப்படும் என தெரிவித்துள்ளார்....
இந்தி ரீமேக்கில் மாஸ்டர் வாத்தியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

இந்தி ரீமேக்கில் மாஸ்டர் வாத்தியாக நடிக்கப்போவது யார் தெரியுமா?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
இந்தி ரீமேக்கில் மாஸ்டர் வாத்தியாக நடிக்கப்போவது யார் தெரியுமா? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்திருந்த படம் ‘மாஸ்டர்’. இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியான இப்படம், மாபெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரிக் குவித்தது. இந்த ஆண்டில் திரையரங்கில் வெளியாகி அதிக வசூல் குவித்த படமும் மாஸ்டர் தான். மாஸ்டர் படம் இந்தியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டாலும், அதனை தற்போது இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்நிலையில், மாஸ்டர் இந்தி ரீமேக்கில் விஜய்யின் ஜேடி (வாத்தி) கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளதாம். அடுத்தாண்டு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல...
பிக்பாஸ் சீசன் 5 எப்போது?

பிக்பாஸ் சீசன் 5 எப்போது?

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
பிக்பாஸ் சீசன் 5 எப்போது? தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது....
அட்லீ படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெய்!

அட்லீ படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெய்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
அட்லீ படத்தில் வில்லனாக நடிக்கும் ஜெய்! இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ஆர்யா நடிப்பில் வெளியான ‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இவர் அடுத்ததாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து இந்திப் படம் ஒன்றை இயக்க உள்ளார். இயக்குனர் அட்லீ, தனது மனைவி பிரியாவுடன் இணைந்து பட தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவர்கள் தயாரிப்பில் சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் போன்ற படங்கள் வெளியானது. இந்நிலையில், இயக்குனர் அட்லீ அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ஜெய் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர், இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அட்லீயுடன் ராஜா ராணி படத்தில் ...
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அலட்சியம் வேண்டாம் – நடிகர் அமிதாப்பச்சன்!

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அலட்சியம் வேண்டாம் – நடிகர் அமிதாப்பச்சன்!

CINI NEWS, helth tips, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் அலட்சியம் வேண்டாம் - நடிகர் அமிதாப்பச்சன்! கொரோனா தொற்று இரண்டாவது அலையில் அதிகமானோர் பாதித்து இருப்பதால் பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கை பிறப்பித்து உள்ளன. நடிகர், நடிகைகள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், தேவையில்லாமல் வெளியே போவதை தவிர்த்தல் போன்றவற்றை வலியுறுத்தி விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களையும் வலைத்தளத்தில் பகிர்கின்றனர். இந்நிலையில் நடிகர் அமிதாப்பச்சன் கொரோனா 2-வது அலையில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “சில பகுதிகளில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். கொரோனா விதிமுறைகளை பின்பற்றுங்கள். கைகளை கழுவுங்கள், முக கவசங்கள் அ...
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை!

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை! தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருகிற 14-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று பரவல் தொடர்ந்து கூடுதலாகவே இருந்ததால் முழு ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்பட்டது. ஒருசில தளர்வுகள் மட்டும் அங்கு அறிவிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உயர் அதிகாரிகளுடன்  ஊரடங்கு  குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களுக்கு தளர்வுகள் இல்லாத ஊரடங்கு  அமல...
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா?- மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை!

ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா?- மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வருமா?- மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை! தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் இருந்து கொரோனா வைரஸ்  2-வது அலை பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. கடந்த மாதம் 2-வது வாரத்திற்கு மேல் பாதிப்பு உச்சத்தை தொட்டது. 21-ந் தேதி அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 36 ஆயிரத்து 184ஆக இருந்தது. மேலும் பலி எண்ணிக்கையும் 467ஆக உயர்ந்தது. இதனால் தமிழ்நாட்டில் 24-ந்தேதி முதல் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டது. தொடர்ந்து பாதிப்பு 30 ஆயிரத்துக்கு மேல் இருந்ததால் முழு ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு தொற்று தொடர்ந்து சரிந்து வந்ததால் கடந்த 7-ந்தேதி முதல் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு அலுவலகங்கள் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. கோவ...
சீதையாக நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்ட பிரபல நடிகை!

சீதையாக நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்ட பிரபல நடிகை!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
சீதையாக நடிக்க ரூ.12 கோடி சம்பளம் கேட்ட பிரபல நடிகை! பாகுபலி வெற்றிக்கு பிறகு அனைத்து மொழிகளிலும் சரித்திர புராண படங்கள் அதிகம் தயாராகின்றன. மலையாளத்தில் ‘அரபிக் கடலின்டே சிம்ஹம்’ எனும் சரித்திர படத்தில் மோகன்லால் நடித்துள்ளார். தெலுங்கில் ராமாயண கதை ‘ஆதிபுருஷ்’ என்ற பெயரில் படமாகிறது. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான் நடிக்கின்றனர். ரூ.500 கோடி செலவில் இப்படம் தயாராகிறது. தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளிலும் இந்த படத்தை டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். இந்நிலையில், இந்தியிலும் ராமாயண கதை ‘சீதா’ என்ற பெயரில் படமாகிறது. சீதையின் பார்வையில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால் இப்படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் சீதையாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். கதை கேட்டதும் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள ...