ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

நடிகையை அடித்து சித்ரவதை செய்த நடிகர் கைது!

நடிகையை அடித்து சித்ரவதை செய்த நடிகர் கைது!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள், நடிகைகள்
நடிகையை அடித்து சித்ரவதை செய்த நடிகர் கைது! இந்தியில் ரபூ சக்கார், ஹாஸ்டி ஹாஸ்டி, ஜாக் இன் ஜோஹி, டாம் டிக் ஹாரி ராக் அகைன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிஷா ராவல். இந்தி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இவருக்கும், டி.வி. நடிகர் கரண் மேஹ்ராவுக்கும் 2017-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நிஷா ராவலுக்கும், கணவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். விவாகரத்து செய்து கொள்ளவும் முடிவு செய்து இருந்தனர். இந்நிலையில், கணவர் தன்னை அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்ததாகவும், சுவரில் தள்ளியதாகவும், இதில் தனது தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது என்றும் மனுவில் கூறியுள்ளார். இதையடுத்து மும்பை போலீசார் விசாரணை நடத்தி கரண் மேஹ்ராவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த விவகாரம் பாலிவுட் திரையுலகில்...
கொரோனா தடுப்பு பணிகள்- மருத்துவ குழுவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

கொரோனா தடுப்பு பணிகள்- மருத்துவ குழுவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

HOME SLIDER, NEWS, செய்திகள்
கொரோனா தடுப்பு பணிகள்- மருத்துவ குழுவினருடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை! கொரோனா 2-வது அலை மிக வேகமாக பரவியதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். தினமும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் முழு ஊரடங்கு கடந்த மாதம் 24-ந்தேதியில் இருந்து பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 1-ந்தேதியில் இருந்து மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பரவுவது குறைந்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று எதிர் பார்த்த அளவுக்கு குறையவில்லை. இதனால் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். இதையொட்டி இந்த மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டன. இதன் காரண...
பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாட்களில் தெரிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாட்களில் தெரிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!

HOME SLIDER, NEWS, செய்திகள்
பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாட்களில் தெரிவிக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி! தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வுகளை நடத்துவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்றார். ஆலோசனைக்குப் பின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. மத்திய அரசு நடத்திய ஆலோசனையின் போது பெரும்பாலான மாநிலங்கள் பிளஸ்-2 தேர்வை நடத்தக்கோரியிருந்தன. ஆனால், சிபிஎஸ்இ தேர்வை மத்திய அரசு நேற்று ரத்து செய்துள்ளது. தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நடத்துவது குறித்து நிபுணர்கள், கல்வியாளர்களின் கருத்தை கேட்டு 2 நாட்களில் முடிவெடுக்கப்படும். 14417 என்ற தொலைபேசி எண்ணில் கல்வியாளர்கள், பெற்றோர், மாணவர்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்...
கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ‘சென்னை 28’ நண்பர்கள்!

கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ‘சென்னை 28’ நண்பர்கள்!

CINI NEWS, helth tips, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட ‘சென்னை 28’ நண்பர்கள்! வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் சென்னை 28. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இதன் 2 ஆம் பாகமும் வெளியானது. இதில் சிவா, பிரேம்ஜி, நிதின் சத்யா, அரவிந்த், ஜெய், வைபவ் உள்பட ஏராளமானோர் நடித்திருந்தனர். தற்போது கொரோனா 2-வது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ‘சென்னை 28’ கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது. கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர்கள் பிரேம்ஜி, நிதின் சத்யா, அரவிந்த் ஆகியோர் இணைந்து வீடியோ வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோவில், மாஸ்க் அணியவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் ரசிகர்களுக்கு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்....
நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி பகீர் புகார்!

நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி பகீர் புகார்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகைகள்
நடிகை சாந்தினி மீது முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி பகீர் புகார்! சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அண்மையில் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மணிகண்டன் தன்னை 3 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும், தனது அந்தரங்க புகைப்படங்களை வைத்து கொண்டு மிரட்டல் விடுப்பதாகவும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார். இதுதொடர்பாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது, கட்டாய கருக்கலைப்பு செய்தல், பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறை, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே, கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் காவல...
சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: அமைச்சரவையில் முக்கிய முடிவு!

சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: அமைச்சரவையில் முக்கிய முடிவு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: அமைச்சரவையில் முக்கிய முடிவு! இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலைவரிசை மிகப்பெரிய அளவில் பரவி உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வை நடத்த வேண்டாம் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூடியது. இதில் சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு தேர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது கொரோனா தொற்று காரணமாக சிபிஎஸ்சி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது....
மகேஷ்பாபுக்கு வில்லனாகும் அர்ஜுன்!

மகேஷ்பாபுக்கு வில்லனாகும் அர்ஜுன்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
மகேஷ்பாபுக்கு வில்லனாகும் அர்ஜுன்! தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு தற்போது பரசுராம் பெட்லா இயக்கும் ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை துபாயில் நடத்தி முடித்த படக்குழு, அடுத்தகட்ட படப்பிடிப்பை கொரோனா பரவல் குறைந்த பின் நடத்த திட்டமிட்டு உள்ளனர். இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கப்போவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. மகேஷ் பாபுவுக்கு வில்லனாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்திவந்தது. இதில் நடிகர் அர்ஜுன் வில்லனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அர்ஜுனுக்கு இப்படத்தின் கதை மிகவும் பிடித்திருப்பதாகவும், கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என்றும் கூறப்படுகிறது. இப...
சர்வதேச பட விழாவில் திரையிட தேர்வான நயன்தாராவின் கூழாங்கல்!

சர்வதேச பட விழாவில் திரையிட தேர்வான நயன்தாராவின் கூழாங்கல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
சர்வதேச பட விழாவில் திரையிட தேர்வான நயன்தாராவின் கூழாங்கல்! நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி திரைப்படங்களை தயாரித்து வருகிறார். இவர்கள் தயாரிப்பில் ‘நெற்றிக்கண்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ போன்ற படங்கள் உருவாகி வருகிறது. இதுதவிர பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கூழாங்கல்’ படத்தையும் தயாரித்துள்ளார் நயன்தாரா. இப்படம் சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்று வருகிறது. ஏற்கனவே நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் போட்டி பிரிவில் திரையிடப்பட்டு சிறந்த படத்துக்கான விருதை பெற்றது. ரோட்டர்டாம் சர்வதேச விழாவில் விருது பெற்ற முதல் தமிழ் படம் கூழாங்கல் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவிலும் ‘கூழாங்கல்’ திரையிடப்பட்டு சிறந்த திரைப்பட...
‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ – ஜகமே தந்திரம் !

‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ – ஜகமே தந்திரம் !

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள்
‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ - ஜகமே தந்திரம் ! பேட்ட படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள நிலையில், இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டிரெய்லர், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அதில் தனுஷ் பேசும் ‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ என்ற வசனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படத்தை ஓடிடியில் வெளியிடுவதால் அதிருப்தியில் இருந்த தனுஷ்,...