“ஜீவா 46” மூலமாக மீண்டும் இணைந்த “பிளாக்” வெற்றிப்படக்கூட்டணி!
மீண்டும் இணைந்த “பிளாக்” வெற்றிப்படக்கூட்டணி, “ஜீவா 46” கோலாகலத் துவக்கம்!!
நடிகர் ஜீவா நடிப்பில், பிளாக் பட இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கும் புதிய படம் “ஜீவா 46” இனிதே துவங்கியது!!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா, பிளாக் பட வெற்றி இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி உடன் மீண்டும் இணைகிறார். ஜீவாவின் 46 வது படமாக உருவாகும் இப்படத்தினை, KR Group சார்பில் கண்ணன் ரவி தயாரிக்கிறார். துணை தயாரிப்பை முத்துக்குமார் ராமநாதன் மேற்கொள்கிறார்.
இப்படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். ரபியா கட்டூன் நாயகியாக நடிக்கிறார். பப்லூ பிரித்திவிராஜ், நைலா உஷா, ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். படக்குழுவினர் கலந்துகொள்ள எளிமையான பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது. மேலும் இந்த பூஜையில் நடிகர் விஷால், தயாரிப்பாளர் ஆர்...









