ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? -வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? -வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? -வாக்கு எண்ணிக்கை தொடங்கியது! தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், அ.ம.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் என 5 முனை போட்டி நிலவுகிறது. மேலும், சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் போட்டியிட்டு உள்ளனர். மொத்தத்தில் 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நடத்தப்பட்ட தேர்தல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 75 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள...
கருத்து கணிப்புகளில் திமுக முந்தி அதிமுக சரிவை சந்தித்தது ஏன்? கோடங்கி பார்வை

கருத்து கணிப்புகளில் திமுக முந்தி அதிமுக சரிவை சந்தித்தது ஏன்? கோடங்கி பார்வை

HOME SLIDER, NEWS, politics, வீடியோ
  கருத்து கணிப்புகளில் திமுக முந்தி அதிமுக சரிவை சந்தித்தது ஏன்? கோடங்கி பார்வை https://youtu.be/RF5TorRmAhs
கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!

கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
கிரிக்கெட் வீரர் அஸ்வின் குடும்பத்தினர் 10 பேருக்கு கொரோனா! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் அஸ்வின். 34 வயதான அவர் டெஸ்ட் அணியில் மட்டுமே ஆடி வருகிறார். சென்னையை சேர்ந்த அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகாக விளையாடி வந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு அஸ்வின் ஐ.பி.எல். போட்டியில் இருந்து பாதியில் விலகினார். கொரோனா வைரசுக்கு எதிராக என்னுடைய குடும்பத்தார் போராடி வரும் நிலையில் அவர்களுக்காக உடன் இருப்பது அவசியம் என்பதால், ஐ.பி.எல்.லில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்தார். இந்த நிலையில் அஸ்வின் குடும்பத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை அஸ்வினின் மனைவி பிரீத்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- எங்கள் குடும்பத்தில் பெரியவர்கள் 6 பேருக்கும், சிறியவர்கள் 4 பேருக்கு...
கொரோனா சிகிச்சை பெற்று வந்த அஞ்சான் பட நடிகர் காலமானார்!

கொரோனா சிகிச்சை பெற்று வந்த அஞ்சான் பட நடிகர் காலமானார்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
கொரோனா சிகிச்சை பெற்று வந்த அஞ்சான் பட நடிகர் காலமானார்! கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொண்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல நடிகர் பிக்ரம்ஜித் கன்வர்பால் உயிரிழந்துள்ளார். இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தியில் பல படங்களில் நடித்து மிகப் பிரபலமானவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவர் ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு வயது 52. இவரின் இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்....
அஜித்துடன் நடித்த காட்சியை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

அஜித்துடன் நடித்த காட்சியை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகர்கள்
அஜித்துடன் நடித்த காட்சியை பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சிவகார்த்திகேயன்! தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் இன்று தன்னுடைய 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனால் ரசிகர்கள், திரை பிரபலங்கள் பலரும் அஜித்தின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், ஏகன் படத்தில் அஜித்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து கூறி இருக்கிறார். நீங்கள் வாழ்வில் பல சோதனைகளை கடந்து சாதனைகள் படைத்தது போல் இந்த இக்கட்டான சூழ்நிலையையும் நாங்கள் கடப்போம் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கு இனிய பொன் விழா ஆண்டு நல்வாழ்த்துகள் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்....
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- முன்னணி நிலவரம் நாளை காலை 11 மணிக்கு தெரியும்!

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- முன்னணி நிலவரம் நாளை காலை 11 மணிக்கு தெரியும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்?- முன்னணி நிலவரம் நாளை காலை 11 மணிக்கு தெரியும்! தமிழ்நாட்டில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 72.81 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வாக்குப்பதிவு முடிவடைந்ததும் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த அறைகள் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டு உள்ளன. அறைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 75 மையங்களில் எண்ணப்படுகின்றன. இதற்காக தலைமை தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜையிலும் 500 தபால் வாக்க...
அதிகரிக்கும் கொரோனா பரவல்: இந்தியாவுக்கு உதவ தயார் – சீன அதிபர் ஜி ஜின்பிங்!

அதிகரிக்கும் கொரோனா பரவல்: இந்தியாவுக்கு உதவ தயார் – சீன அதிபர் ஜி ஜின்பிங்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அதிகரிக்கும் கொரோனா பரவல்: இந்தியாவுக்கு உதவ தயார் - சீன அதிபர் ஜி ஜின்பிங்! கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியா கடும் பாதிப்பையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகிறது. இதனால்  இந்தியாவுக்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவுக்கு தேவையான மருத்துவ உதவி பொருட்கள் பல நாடுகளில் இருந்து வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவதில் இந்தியாவுக்கு உதவ தயாராக இருப்பதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். சீன அரசு தொலைக்காட்சி இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக சீன அரசு தொலைக்காட்சியில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுடனான ஒத்துழைப்பை அதிகரிக்க சீனா தயாராக உள்ளது. இந்தியாவுக்கு ஆதரவு மற்றும் உதவிகளை வழங்க சீனா தயாராக உள்ளது என ஜி ஜின்பிங் கூறினார் என்று தெர...
ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்!

ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம், செய்திகள்
ஜப்பானில் 6.6 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்! ஜப்பானின் ஹோன்சு நகரில் கிழக்கு கடற்கரையோர பகுதியில் இன்று காலை 6.57 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 6.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக...
ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பயன்பாட்டை கண்காணியுங்கள்- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பயன்பாட்டை கண்காணியுங்கள்- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் பயன்பாட்டை கண்காணியுங்கள்- மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்! நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தினமும் 3 லட்சத்துக்கு மேலாக அதிகரித்து வருகிறது. கொரோனா சிகிச்சையில் ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிக்கிறது. நோயாளிகள் எண்ணிக்கை பெருகும்போது, ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை சமாளிக்க பல நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதையொட்டி மத்திய சுகாதார துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால், டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கொரோனா வைரஸ் தொற்று நோய் தொடங்கியதில் இருந்து, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை மத்திய அரசு முக்கிய மருத்துவ தலையீடாக அடையாளம் கண்டது. 1 லட்சத்து 2 ஆயிரத்து 400 ஆக்சிஜன் சிலிண்டர்களை தேசிய அளவில் கடந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மத்திய அரசு கொள்முதல் செய்தது. ஏப்ரல் 21-ந் தேதியன்று ...
தமிழக சட்டசபை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது!

தமிழக சட்டசபை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
தமிழக சட்டசபை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது! தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சர் யார் என்ற கேள்வியுடன், தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ந் தேதி நடந்தது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளிலும் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பத்திரமாக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. சென்னையில் 16 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ராணி மேரி, லயோலா, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தநிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட...