ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 15
Shadow

HOME SLIDER

இந்திய விமானங்களுக்கு கனடாவும் தடை விதிப்பு

இந்திய விமானங்களுக்கு கனடாவும் தடை விதிப்பு

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
    இந்திய விமானங்களுக்கு கனடாவும் தடை விதிப்பு இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி மிக கடுமையான பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்திய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்பவர்கள் 2 டோஸ் தடுப்பு மருந்து போட்ட பிறகு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. பிரான்ஸ் நாடும் இந்தியாவில் இருந்து வருவர்கள் தங்களை குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது....
53 பேருடன் சென்ற இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் மாயம்!

53 பேருடன் சென்ற இந்தோனேசிய நீர்மூழ்கி கப்பல் மாயம்!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், உலகம்
இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான கே.ஆர்.ஐ. நங்கலா-402 ரக நீர்மூழ்கி கப்பல் அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பாலி தீவு அருகே ஜாவா கடலில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அந்த நீர்மூழ்கி கப்பலில் இந்தோனேசிய கடற்படையினர், மாலுமிகள் உள்பட மொத்தம் 53 பேர் பயணித்தனர் இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் பாலி தீவு பகுதியில் உள்ள கடற்பரப்பில் 95 கிலோமீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. உடனடியாக, நீர்மூழ்கி கப்பலை தொடர்புகொள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து மீண்டும் முயற்சித்தபோதும் அந்த முயற்சி தோல்வியடைந்தது. இதையடுத்து, இந்தோனேசிய கடற்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக செயல்பட்ட கடற்படையினர் நீர்மூழ்கி கப்பல் கடைசியாக கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்த கடற்பரப்பில் தீவிர தேடுதல் ...
முதல்வர் பழனிசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு!

முதல்வர் பழனிசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு!

HOME SLIDER, NEWS, politics
ரூ.1 கோடி கேட்டு திமுக நிர்வாகி வழக்கு முதல்வர் பழனிசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு! கோவை தி.மு.க. நிர்வாகியான சூலூர் ஏ. ராஜேந்திரன் கடந்த ஆண்டு மார்ச் 19-ந்தேதி சென்னையிலிருந்து கோவைக்கு ரெயிலில் சென்றுள்ளார். அவருக்கு நீரழிவு பிரச்சினை இருப்பதால் மேல்படுக்கையிலிருந்து கீழே இறங்கும்போது, நிலை தடுமாறி கீழ் படுக்கையில் இருந்த பெண் மீது விழுந்ததாக கூறப்படுகிறது இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகம் மற்றும் காவல்துறையில் அந்த பெண் வாய்மொழி புகார் அளித்த நிலையில், தனது செயல்பாடு உள்நோக்குடன் நடந்தது இல்லை என்றும், நீரழிவு பிரச்சினை இருப்பதால் அவசரமாக இறங்கியதாகவும் சூலூர் ராஜேந்திரன் அந்த பெண்ணிடம் விளக்கம் அளித்துள்ளார். இதன்பின்னர் தன் புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பெண் தெரிவித்துள்ளார். ஆனால் 15 நாட்களுக்கு பிறகு சூலூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ரெயில் பயணத்தின்...
ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த சிஎஸ்கே!

ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த சிஎஸ்கே!

HOME SLIDER, NEWS, sports, செய்திகள்
ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த சிஎஸ்கே! ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறு விறுப்பான கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுவரை 15-லீக் ஆட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் சென்னை அணி முதலிடம் பிடித்துள்ளது. 4 ஆட்டங்களில் ஒரு தோல்வி 3 வெற்றி என 6 புள்ளிகளுடன் சென்னை அணி முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு ராயல் சேலஞ்ரஸ் அணி 3 போட்டிகளில் விளையாடி 3-லும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 2-ஆம் இடத்தில் உள்ளது.  3 வெற்றி 1 தோல்வி என 6 புள்ளிகளுடன் டெல்லி கேபிடல்ஸ் அணி மூன்றாம் இடத்தில் உள்ளது. 4 போட்டிகளில் விளையாடி 2-வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி 4 ஆம் இடத்தில் உள்ளது....
தேசிய கல்வியாளர் விருது பெற்றார் நடிகர் தாமு!

தேசிய கல்வியாளர் விருது பெற்றார் நடிகர் தாமு!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், செய்திகள்
தேசிய கல்வியாளர் விருது பெற்றார் நடிகர் தாமு! தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன் என்கிற நடிகர் தாமு. இயக்குனர் சிகரம் பாலசந்தரின் சீடரான இவருக்கு சினிமாவை தாண்டிய இன்னொரு முகமும் இருக்கிறது.. ஆம்.. கல்வி சேவையாளர் என்கிற புதிய முகம்.. அந்த முகத்துக்கான அங்கீகாரமும் தற்போது அவரை தேடி வந்துள்ளது. கல்வித்துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக, தொடர்ந்து நடிகர் தாமு மேற்கொண்ட முயற்சிகளுக்காக, தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் (CEGR National Council) சார்பில் "ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021" என்கிற தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது. கல்வித் துறையில் சில முக்கியமான பங்களிப்புகளைக் கருத்தில் கொண்டே, நடிகர் தாமுவுக்கு, இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது....
உண்மையான அன்பு கிடைத்தால் பிடித்துக் கொள்ளுங்கள் – செல்வராகவன்!

உண்மையான அன்பு கிடைத்தால் பிடித்துக் கொள்ளுங்கள் – செல்வராகவன்!

CINI NEWS, HOME SLIDER, NEWS, சினி நிகழ்வுகள், செய்திகள்
உண்மையான அன்பு கிடைத்தால் பிடித்துக் கொள்ளுங்கள் - செல்வராகவன்! காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்.ஜி.கே ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன். இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘உண்மையான அன்பு எங்கேயாவது கிடைத்தால் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்! வாழ்வில் மிகக் கடினம் அதுதான்’ என்று பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் பலவிதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.  ...
காதலியை கரம்பிடித்தார் விஷ்ணு விஷால்!

காதலியை கரம்பிடித்தார் விஷ்ணு விஷால்!

CINI NEWS, HOME SLIDER, sports, சினி நிகழ்வுகள், நடிகைகள்
காதலியை கரம்பிடித்தார் விஷ்ணு விஷால்! வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ்குடவாலாவின் மகன். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார். அதைத்தொடர்ந்து பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். கடந்தாண்டு இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற இருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இன்று திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது....
காவலர்களுடன் மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய ரம்யா பாண்டியன்!

காவலர்களுடன் மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய ரம்யா பாண்டியன்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
காவலர்களுடன் மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய ரம்யா பாண்டியன்! நகைச்சுவை நடிகர் விவேக், கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இது திரையுலகினர் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிக அளவில் மரங்களை நட்டு இயற்கையை பாதுகாக்க விரும்பியவர் விவேக். அதனால் அவர்மீது அபிமானம் கொண்ட பலரும் தங்கள் பகுதியில் மரக்கன்றுகளை நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று சிம்புவின் மாநாடு படக்குழுவினர் மரக்கன்று நட்டு விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், நடிகை ரம்யா பாண்டியன், விவேக் மறைவையொட்டி அவர் நினைவாக 59 (விவேக் வயது) மர கன்றுகளை திருவள்ளூர் ஆயுத படை மைதானத்தில்  மாவட்ட SP. அரவிந்தன் மற்றும் காவலர்களும் நட்டு சிறப்புரை ஆற்றினார்....
‘இந்தியன் 2’ பட ஷூட்டிங் எப்போது முடியும்? – ஐகோர்ட்டில் இயக்குனர் ஷங்கர் தகவல்!

‘இந்தியன் 2’ பட ஷூட்டிங் எப்போது முடியும்? – ஐகோர்ட்டில் இயக்குனர் ஷங்கர் தகவல்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள்
‘இந்தியன் 2’ பட ஷூட்டிங் எப்போது முடியும்? - ஐகோர்ட்டில் இயக்குனர் ஷங்கர் தகவல்! கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த ஆண்டு படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விபத்து ஏற்பட்ட போது நிறுத்தப்பட்ட, இப்படத்தின் படப்பிடிப்பு அதன்பின் தொடங்கப்படவில்லை. இதனிடையே, தெலுங்கில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஷங்கர் தயாராகி வருகிறார். அதேபோல் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கையும் இயக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார் ஷங்கர். இதனிடையே, இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படத்தை ஷங்கர் இயக்க தடை விதிக்க கோரி ஐகோர்ட்டில் லைகா நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது. ஷங்கர் தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறிய நீதிமன்றம், ஷங்கர் தரப்பு விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஷங்கர் தரப்பில் ...
தவறான சிகிச்சையால் முகவீக்கம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ரைசா நோட்டீஸ்!

தவறான சிகிச்சையால் முகவீக்கம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ரைசா நோட்டீஸ்!

CINI NEWS, HOME SLIDER, சினி நிகழ்வுகள், நடிகைகள்
தவறான சிகிச்சையால் முகவீக்கம் ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ரைசா நோட்டீஸ்! பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரைசா வில்சன். அதன்பிறகு ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரையுலகில் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து நடித்து வருகிறார். ரைசா சமீபத்தில் முக வீக்கத்துடன் ஒரு படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அவர் கூறியிருந்ததாவது: “முகப் பொலிவு செய்வதற்காக அழகியல் மருத்துவரிடம் சென்றேன். அப்போது தேவையற்ற சில வி‌ஷயங்களை செய்து எனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி விட்டது. இவ்வாறு அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே ரூ. 1 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் கேட்டு ரைசாவின் வக்கீல், சம்பந்தப்பட்ட அழகியல் மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில் கூறிய...