அதானி குழுமத்தின் வேளாண் பொருள் சேமிப்பு கிடங்குகள் குறித்து செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் மீது கொலைவெறித் தாக்குதல்!
ஹரியானா மாநிலம், கர்நாலைச் சேர்ந்த ஊடகவியலாளரும், ஐபிஎன்24 (IBN24) ஊடகத்தில் பணியாற்றி வருபவருமான அகர்ஷன் உப்பல், கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல் ஒன்றால், அகர்ஷன் தாக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆனால், அகர்ஷன் உப்பல் மீதான இந்த தாக்குதலின் பின்னணியில், வேறு சில காரணங்கள் இருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
அகர்ஷன் உப்பல் சமீபகாலமாக, விவசாயிகள் போராட்டம் தொடர்பான செய்திகளை அதிகமாக கொடுத்து வந்துள்ளார். குறிப்பாக, அதானி உள்ளிட்ட பெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவே புதிய வேளாண் சட்டங்களை மோடி அரசு கொண்டு வந்துள்ளது என்பதை ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார்
. எனவே, அவர் மீதான தாக்குதலுக்கு, போதைப்பொருள் கடத்தல் கும்பல் தொடர்பான செய்தி மட்டும் காரணமாக இருக்க முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர்...









