வெள்ளிக்கிழமை, நவம்பர் 13
Shadow

HOME SLIDER

திரிஷாவை ரசிகர்கள் மறந்து விட்டு என்னை ரசிப்பார்கள் – “ஜானு” சமந்தா அதிரடி

திரிஷாவை ரசிகர்கள் மறந்து விட்டு என்னை ரசிப்பார்கள் – “ஜானு” சமந்தா அதிரடி

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகைகள்
  திரிஷாவை ரசிகர்கள் மறந்து விட்டு என்னை ரசிப்பார்கள் - "ஜானு" சமந்தா அதிரடி விஜய் சேதுபதி - திரிஷா நடித்த '96' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஜானு'வில் சர்வானந்தும், சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே திரிஷா நடிப்புடன் சமந்தாவை ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் சமந்தா கூறியதாவது: இதுவரை நான் நடித்த அனைத்து படங்களையும் விட சிறப்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறேன். முக்கியமாக திரிஷாவின் நடிப்பை நகலெடுக்க விரும்பாமல் எனது சாயலில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். அதனால் அவரது நடிப்பில் இருந்து ஜானுவில் மாறுபட்ட சமந்தாவை பார்க்கலாம். 96 படத்தைப் பொறுத்தவரை திரிஷா சிறப்பாக நடித்திருந்தார். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஜானு படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள் கண்டிப்பாக திரிஷாவை மறந்து விடுவார்கள்....
கா‌‌ஷ்மீரில் ஏழுமலையான் கோவில் கட்டும்  பணிகள் விரைவில் தொடங்கும்!

கா‌‌ஷ்மீரில் ஏழுமலையான் கோவில் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கும்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    கா‌‌ஷ்மீரில் ஏழுமலையான் கோவில்- விரைவில் கட்டுமான பணிகள் தொடக்கம் திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் திருப்பதியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கா‌‌ஷ்மீரில், திருப்பதி ஏழுமலையான் கோவில் கட்ட 7 இடங்களை ஜம்மு-கா‌‌ஷ்மீர் அரசு பரிந்துரை செய்தது. இதைத்தொடர்ந்து தேவஸ்தான குழுவினர் அங்கு சென்று கோவில் கட்ட ஏதுவான 4 இடங்களை தேர்வு செய்தனர். இறுதிக்கட்டமாக நாங்கள் அங்கு சென்று ஆய்வு செய்கிறோம். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும். கா‌‌ஷ்மீரில் விரைவில் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கும் என்றார்....
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது தலைநகரான டெல்லியில் 70 இடங்களை கொண்டுள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. இன்று மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவினாலும், உண்மையான போட்டி ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேதான் நிலவுகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்காக ஆம் ஆத்மியும், ஆட்சியை பிடிப்பதற்காக பாரதீய ஜனதாவும் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் மீண்டும் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என கூறப்பட்டது. டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவாகிற ஓட்டுகள், 11-ந்தேதி எண்ணப்படுகின்றன. அன்று மதியமே டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்த...
சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க வருமானவரித் துறை  நடவடிக்கை தீவிரம்!  –

சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க வருமானவரித் துறை நடவடிக்கை தீவிரம்! –

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    சசிகலா வாங்கிய ரூ.1,674 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை - வருமான வரித்துறை மும்முரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், தொழில் நிறுவனங்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை கடந்த 2017-ம் ஆண்டு சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்கள் அடிப்படையில் வருமான வரித்துறை நடத்திய விசாரணையில், 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதி மத்திய அரசால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மூலம் சென்னை, கோவை, காஞ்சீபுரம், புதுச்சேரி, மதுரை போன்ற பல்வேறு இடங்களில் சுமார் ரூ.1,674 கோடிக்கு சசிகலா ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்தது தெரியவந்தது. செல்லாத ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொண்டு சசிகலாவுக்கு சொத்துகளை விற்பனை செய்தது யார்? யார்? என்பது குறித்தும் ...
ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக!

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும் என்எல்சி சுரங்கம் 2ன் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பாதுகாக்கப்பட்ட இடத்தில் எப்படி அனுமதி வழங்கலாம் என சுரங்கத்தை முற்றுகையிட்டு  பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக கடந்த 2 நாட்களாக நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமானவரித் துறை சோதனையில் விஜய் வீட்டில் ரொக்கம் ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. வருமானவரித் துறை சோதனை முடிந்து விஜய் மீண்டும் மாஸ்டர் ஷூட்டிங் வந்தார். இந்த சூழலில் விஜய்க்கு எதிராக பாஜகவில் சிலர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு எதிரே ஆர்ப்பாட்டம் நடத்தினர்....
பிப்ரவரி 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்!

பிப்ரவரி 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்!

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
    பிப்ரவரி 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்! தமிழக சட்டப்பேரவை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 14ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினமே தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக அரசின் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் காலை 10 மணிக்கு தாக்கல் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது....
7 பேர் விடுதலையில் முடிவெடுக்கும் முழு  அதிகாரம் கவர்னருக்கு உள்ளதாம் – மத்திய உள்துறை விளக்கம்

7 பேர் விடுதலையில் முடிவெடுக்கும் முழு அதிகாரம் கவர்னருக்கு உள்ளதாம் – மத்திய உள்துறை விளக்கம்

HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேரை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து தமிழக அமைச்சரவையில் தீர்மானம் இயற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், இதன் மீது எந்த ஒரு முடிவும் எடுக்காமல் கவர்னர் அமைதியாக உள்ளார். இதையடுத்து சென்னை ஐகோர்ட்டில் நளினி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘தமிழக அமைச்சரவை எங்களை (7பேரை) முன்கூட்டியே விடுதலை செய்ய முடிவு செய்து தீர்மானம் இயற்றி பல மாதங்களாகியும், அதன் மீது கவர்னர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார். இதனால், நாங்கள சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளோம். எங்களை முன் கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி சுப்பையா, பொங்கியப்பன் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், இ...
மூன்று நூற்றாண்டு கதையைச் சொல்லும் ‘2323’ படம்!

மூன்று நூற்றாண்டு கதையைச் சொல்லும் ‘2323’ படம்!

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  மூன்று நூற்றாண்டு கதையைச் சொல்லும் '2323' படம்! மூன்று நூற்றாண்டுகளின் சம்பவங்களோடு கதை சொல்லும் படமாக '2323 The beginning 'உருவாகிறது. மூன்று நூற்றாண்டுகளில் நடக்கும் கதைப் பின்னணியுடன் இந்தத்  தமிழ்ப் படம் உருவாகி வருகிறது.  கதை ,திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் பொறுப்பையும் ஏற்று இயக்கி வருகிறார் சதீஷ் ராமகிருஷ்ணன். இவர் இதற்கு முன்பு 'தமிழனானேன்' என்றொரு படத்தை எடுத்திருந்தார்.  அதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, தமிழனின் வீரக்கலையான வர்மக்கலையை எப்படிப் பயன்படுத்தி வெற்றி பெறுவது என்பதைக் காட்சிப்படுத்தியிருந்தார்.  இந்த' 2323 'படத்தைப்  பற்றி இயக்குநர் பேசும் போது, "இது மூன்று நூற்றாண்டுகளில், அதாவது 300 ஆண்டுகளில் நடக்கும் கதை. இதை மூன்று பாகமாக எடுக்கிறேன். இப்படம் 2020 -ல் முதல் பாகத்தில் தொடங்குகிறது. கதை, மூன்றாம் பாகத்தில் 2323-ல் முடியும். ...
விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!!

விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!!

CINI NEWS, HOME SLIDER, NEWS, politics, சினி நிகழ்வுகள், செய்திகள், நடிகர்கள்
  விஜய் வீடு உள்ளிட்ட 38 இடங்களில் வருமானவரி சோதனை! 77 கோடி ரொக்கம் 300 கோடிக்கு ஆவணங்கள் சிக்கியது!! நடிகர் விஜய் நடித்த பிகில் பட வியாபாரத்தில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து நெய்வேலியில் மாஸ்டர் ஷூட்டிங்கில் இருந்த விஜய் வருமானவரித் துறை அதிகாரிகளால் படப்பிடிப்பை நிறுத்தி விட்டு சென்னை அழைத்து வரப்பட்டார். சுமார் 35 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை நேற்று இரவு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் மத்திய நேரடி வரி வாரிய ஊடகம் மற்றும் தொழில் நுட்பக்கொள்கை வருமான வரி ஆணையர் சுரபி அலுவாலியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழ்நாட்டில் உள்ள திரைத்துறையை சார்ந்த தயாரிப்பாளர், ஒரு பிரபல நடிகர் மற்றும் அவருடைய வினியோகஸ்தர் மற்றும் பைனான்சியர் ஆகிய 4 முக்கியமானவர்கள் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை கடந்த 5-ந்தேதி சோதனை நடத்தி...
விஜய்தேவரகொண்டா படத்தில் ராஷிகன்னா நிர்வாணமாக நடித்தாரா?

விஜய்தேவரகொண்டா படத்தில் ராஷிகன்னா நிர்வாணமாக நடித்தாரா?

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள்
  விஜய்தேவரகொண்டா படத்தில் ராஷிகன்னா நிர்வாணமாக நடித்தாரா? தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ராசி கண்ணா. தற்போது விஜய் தேவரகொண்டா ஜோடியாக அவர் நடித்துள்ள வேர்ல்டு பேமஸ் லவ்வர் படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீசர் வெளிவந்து ஒரு வாரம் ஆகப் போகிறது. இப்போது அப்படத்தின் டீசரில் ராசி கண்ணா, ஒரு காட்சியில் நிர்வாணமாக குளிப்பது போன்றும், விஜய் தேவரகொண்டாவுடன் முத்தக் காட்சியும் பற்றி சர்ச்சை எழுந்துள்ளது. அது குறித்து பதிலளித்துள்ள ராசி கண்ணா, "அந்தக் காட்சிகள் கலைக் கண்ணோட்டத்துடன் எடுக்கப்பட்டுள்ளன. படத்திற்கு அவை தேவையானவை. ஒரு கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக அவற்றை எடுக்கவில்லை. படத்தைப் பார்க்காமல் அவை பற்றி எந்த முடிவும் எடுக்கக் கூடாது," என்கிறார்....