வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

A.R.முருகதாஸ் -ரஜினிகாந்த் கூட்டணியின் “தர்பார்” பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் படத்தின் பெயர் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
மிக பிரபல நிறுவனமான லைகா தயாரிக்கும் பிரமாண்டமான படம் இது. ரஜினிகாந்த் மீண்டும் ஒரு ஜாலியான கமர்சியல் படத்தில் நடிக்கப் போகிறார் என்றார்கள்.
அதே நேரம் படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைத்ததாக செய்திகள் வெளியானது.
ஆனால் அதை மறுத்த இயக்குனர் முருகதாஸ் விரைவில் டைட்டில் அறிவிக்கப்படும் என்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன் போட்டோ ஷூட் நடைபெற்றது.
இந்த நிலையில் நாளை 11ம் தேதி முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
முருகதாஸ், ரஜினிகாந்த் உட்பட படக்குழு இன்று புறப்பட்டு மும்பை செல்கிறார்கள்.
இந்த படத்தில் நயன்தாரா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அவரும் மும்பை செல்கிறார்.
இந்த சூழலில் படத்தின் பெயர், பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தர்பார் என பேருடன் வெளியான பர்ஸ்ட் லுக் வித்தியாசமாக இருக்கிறது.
தர்பார் தமிழ் சொல் இல்லை. பெர்சிய மொழியில் தர்பார் என்றால் அரசவை என்று அர்த்தம்.

அப்ப சீக்கிரமா ரஜினிகாந்த் அரசவை அமையப்போகுதுன்னு சொல்லுங்க…

471 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன