சனிக்கிழமை, ஆகஸ்ட் 8
Shadow

நடிகர் சங்கத்திற்கு ஜூன் 23ம் தேதி தேர்தல்..!

 

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வரும் ஜூன் 23 தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் அதிகாரியான நீதிபதி பத்மநாபன் அறிவித்தார்.

நடிகர் சங்கத்தின் தலைவராக நாசர், செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இவர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிந்து விட்டது. நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பணி முடிவடையாமல் இருப்பதால் தேர்தலை 6 மாதம் தள்ளிவைக்க பொதுக்குழுவில் ஒப்புதல் பெற்றார்கள்.

இந்த நிலையில் சங்கத்தின் தேர்தலை நடத்த தேர்தல் அதிகாரியாக நீதிபதி பத்மநாபனை நியமித்தார்கள்.

அவரும் தேர்தல் நடைமுறைகளை மேற்கொண்டார். ஜானகி எம்ஜிஆர் கலைக்கல்லூரியில் ஜூன் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.

இந்த தேர்தலில் கடந்த நிர்வாகத்தில் பதவியில் இருந்தவர்கள் நாசர் தலைமையில் மீண்டும் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார்கள்.

இந்த அணியை எதிர்த்து ராதிகா களம் இறங்குவாரா அல்லது வேறு யாருமாவதா என்பது சில தினங்களில் தெரிய வரும்.

554 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன