வியாழக்கிழமை, ஆகஸ்ட் 6
Shadow

சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கரகாட்டக்காரன் பார்ட் 2 எடுக்க கங்கை அமரன் திட்டம்..!

 

கங்கை அமரன் இயக்கத்தில் 1989ல் ரிலீஸ் ஆகி 200 நாட்களை கடந்து மெகா ஹிட் ஆன படம் கரகாட்டக்காரன் படம்.

ராமராஜன் ஜோடியாக கனகா நடித்திருப்பார். கவுண்டமணி செந்தில் கோவை சரளா காமெடி இன்றளவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

கரகாட்டக்காரன் படத்தில் இடம் பெற்ற வாழைப்பழ காமெடியும், சொப்பன சுந்தரி காமெடியும் எவர்கிரீன் காமெடியாக இன்றும் எல்லாராலும் ரசிக்கப்படுகிறது.

அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.

அப்படி ஹிட் ஆன படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முடிவுக்கு கரகாட்டக்காரன் தயாரிப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரன் வந்துள்ளார்.

வெற்றி பெற்ற பல படங்கள் இப்போது இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருவதால் கரகாட்டக்காரன் 2 எடுக்க முடிவு செய்து இருக்கிறார்.

இதற்காக கரகாட்டக்காரன் படத்தில் நடித்த ராமராஜன், கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்ட பலரிடம் பேசி இருக்கிறார்.

அதாவது கரகாட்டக்காரன் படத்தில் நடித்தவர்களின் இரண்டாவது தலைமுறை இப்போது சந்தித்தால் எப்படி இருக்கும் என கதை யோசிக்கிறார்களாம்.

கரகாட்டக்காரன் படத்தை கங்கை அமரன் இயக்கி இருந்தார். ஆனால் இப்போது எடுக்க உள்ள பார்ட் 2 படத்தில் இயக்குனர், இசையமைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படுமாம்.

2,564 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன