புதன்கிழமை, ஏப்ரல் 29
Shadow

பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு திமுகவுக்கு அழைப்பு இல்லை – டி.ஆர்.பாலு பகீர்

பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வரும்படி திமுகவுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

தேர்தலில் 303 இடங்களை பிடித்து நரேந்திர மோடி தொடர்ந்து 2-வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார்.

இந்த பதவியேற்பு விழா வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது. டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

அவரை தொடர்ந்து பல்வேறு மந்திரிகளும் பதவியேற்பார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க 8 நாடுகளின் தலைவர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு வந்தது. ரஜினி கலந்து கொள்வதாக அறிவித்தார்.

நாடு முழுவதும் மெகா வெற்றி பெற்றாலும் தமிழகத்தில் பாஜக அமைத்த கூட்டணி படு தோல்வியை தழுவியது. அதிலும் பஜக போட்டியிட்ட தொகுதிகளில் டெபாசிட் பறி கொடுத்தது. தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் 38 இடங்களிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்று மத்தியில் அதிக எம்பிக்கள் உள்ள எதிர்க் கட்சியாக உருவெடுத்தது.

இந்நிலையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பிரதமர் பதவி ஏற்கும் விழாவிற்கு திமுகவிற்கு அழைப்பு வந்ததாக கூறப்படும் செய்தி உறுதிப்படுத்தப்படாத ஒன்று.

மோடியின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க திமுகவிற்கு எந்தவொரு அழைப்பும் வரவில்லை. குடியரசு தலைவரிடம் இருந்தோ, பிரதமரிடம் இருந்தோ எந்தவொரு அழைப்பும் வரவில்லை. அழைப்பு வந்தால் செல்வீர்களா என்ற செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த டி.ஆர். பாலு அது குறித்து தலைமை தான் முடிவு எடுக்கும் என்றார்.

806 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன