வெள்ளிக்கிழமை, மார்ச் 29
Shadow

மீண்டும் சி.எம்.ஆக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை படத்தில் நடிக்கிறார் சூர்யா..!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை படத்தில் சூர்யா..!

YS ராஜசேகர ரெட்டி வாழ்க்கை வரலாற்றை யாத்ரா என்ற பெயரில் படமாக்கிய மதி வி.ராகவ் மீண்டும் படம் எடுக்க முடிவு செய்துள்ளார்

ஏற்கனவே எடுத்த யாத்ரா படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக்க அந்த படக்குழு முடிவு செய்து உள்ளது.

எடுக்க திட்டமிட்ட இரண்டாம் பாகத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பயணம் … வளர்ச்சி… தற்போதைய தேர்தலில் பெற்ற மெகா வெற்றி… முதல்வரானது பற்றி பல தகவல்களை வெளிப்படையாக காட்ட திட்டமிட்டிருக்கிறார்கள்.

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படத்தை எடுக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.

இந்த இரு மொழிகளிலும் ரசிகர்களை அதிகம் ஈர்க்கும் சூர்யாவை ஜெகன் மோகன் ரெட்டி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் வாழ்க்கை படத்தில் நடிக்க அழைத்தால் சம்மதம் தெரிவிப்பீர்களா என்ற கேள்விக்கு “நல்ல கதையுடன் வந்தால் கண்டிப்பாக நடிக்கலாம்” என்று சொல்லி இருக்கிறார் சூர்யா.

ஏற்கனவே சூர்யா நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் என்.ஜி.கே படத்தில் படித்த இளைஞர்களை ஒன்று சேர்த்து இயற்கை விவசாயம் செய்யும் சூர்யா சந்தர்ப்பவசத்தால் அரசியலில் அடிமட்ட தொண்டனாக சேர்ந்து பல சிரமங்களை எதிர் கொண்டு கடைசியில் எப்படி முதல்வர் ஆகிறார் என்று சொல்கிறது.

ஆக சூர்யாவுக்குள்ளும் அரசியல் ஆசை துளிர் விடத் தொடங்கி இருக்கிறது.

730 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன