செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 16
Shadow

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை திடீரென சந்தித்த தமிழக கவர்னர்…!

 

உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை திடீரென சந்தித்த தமிழக கவர்னர்…!

சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில், பாஜகவுன் கூட்டணி வைத்த ஆளும் கட்சியான அ.தி.மு.க. படு தோல்வி அடைந்தது.

இந்த சூழலில் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்ற நிலையில் , ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்வது பற்றி கவர்னர் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.

மேலும் சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றுக்கும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று காலை திடீரென்று சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.

அங்கு அவர் உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது மாநிலம் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து அமித்ஷாவுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இதேபோல் மேற்கு வங்காள கவர்னர் கேசரிநாத் திரிபாதி, தெலுங்கானா மற்றும் ஆந்திர மாநிலங்களின் கவர்னர் இ.எஸ்.எல்.நரசிம்மன், ஜார்கண்ட் மாநில கவர்னர் திரவுபதி முர்மு, அருணாசலபிரதேச கவர்னர் பி.டி.மிஸ்ரா ஆகியோரும் அமித்ஷாவை தனித்தனியாக சந்தித்து பேசினார்கள்.

மாநில கவர்னர்கள் உள்துறை மந்திரியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசியதாகவும், தங்கள் மாநில பிரச்சினைகள் குறித்து அவருடன் ஆலோசனை நடத்தியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

880 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன