திங்கட்கிழமை, செப்டம்பர் 14
Shadow

கர்பிணியான ஹாலிவுட் எமிக்கு போட்டியாக பாலிவுட் சமீராவின் பீச் போட்டோ ஷூட்

 

கர்பிணியான ஹாலிவுட் எமிக்கு போட்டியாக பாலிவுட் சமீராவின் பீச் போட்டோ ஷூட்

பாலிவுட் திரையுலகில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான “மெய்னி தில் துஜ்கோ தியா” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அஜித் நடித்த சிட்டிசன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வாரணம் ஆயிரம் ” படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். தமிழ், இந்தி, தெலுங்கில் நடித்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் குடும்பத்தை கவனித்து வந்த நடிகை சமீரா சினிமாவில் கவனித்து விலகினாலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சிகளில் மட்டும் தலை காண்பித்து வந்தார். தற்போது இரண்டாவது முறையாகவும் தாயாகியுள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் என் மகனுக்கு ஒரு தங்கை வேண்டுமென கடவுளிடம் வேண்டிக்கொண்டான் எனவே நிச்சயம் எனக்கு மகள் தான் பிறப்பால் என நெகிழ்ச்சியோடு கூறியிருந்தார்.

அதோடு திருமணம் செய்து கொள்ளாமலேயே கர்ப்பிணி ஆன ஹாலிவுட் நடிகை எமி ஜாக்சன் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்களை அடிக்கடி பொது வெளியில் பதிவிடுவார்.

இப்போது அவருக்கு போட்டியாக சமீராவும் தான் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கடற்கரை அருகில் போட்டோ ஷூட் நடத்தி அந்த படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன