ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

விஜய்சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய அமலாபால்… காரணம் என்ன?

 

விஜய்சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய அமலாபால்… காரணம் என்ன?

பிரபல இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகநாத். இவர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அமலாபால் ஒப்பந்தமாகி இருந்தார்.

விஜய் சேதுபதியின் 33-வது படமான இதற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பழனியில் பூஜையுடன் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் ஹீரோயின் ஆக ஒப்பந்தம் ஆன அமலாபால் திடீரென படத்தில் இருந்து விலகியிருக்கிறார்.

அமலாபாலுக்கு பதிலாக மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம்.

விஜய்சேதுபதி படத்தில் இருந்து அமலாபால் திடீரென விலக கால்ஷீட் பிரச்னை தான் காரணமாம்.

685 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன