வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26
Shadow

துப்பாக்கி 2 மீண்டும் அமைந்த விஜய்-முருகதாஸ் கூட்டணி!

 

 

மீண்டும் அமைந்த விஜய்-முருகதாஸ் கூட்டணி!

நடிகர் விஜய் இயக்குநர் முருகதாஸ் இருவரும் ஏற்கனவே கத்தி, துப்பாக்கி, சர்கார் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்திருக்கிறார்கள்.

விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குனர் முருகதாஸ் சமீபத்தில் தான் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் படத்தை இயக்கி இருந்தார்.

இந்த நிலையில் விஜய் 65 படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யாராக இருக்கக்கூடும் என பல ஹோசியங்கள் திரைத்துறையில் உலவி வந்தது.

இந்த நிலையில் மீண்டும் விஜய் நடிக்க அந்த படத்தை முருகதாஸ் இயக்க முடிவாகி உள்ளது.

விஜய் – முருகதாஸ் கூட்டணி இதுவரை 3 படங்களில் இணைந்திருந்தாலும் ஒவ்வொரு படத்திலும் சமூக கருத்தை சொல்வது வழக்கம். இப்போது மீண்டும் விஜய்65 படத்திலும் அழுத்தமான சமூக கருத்தை சொல்வார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் ஜோடி உட்பட மற்ற நட்சத்திரங்கள் தேர்வு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பின் தேர்வு செய்வார்களாம்.

அடுத்த ஆண்டு பொங்கலில் ரிலீஸ் செய்ய திட்டமாம்.

1,046 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன