வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

கொரானா தீவிரத்தால் ஏப்ரல் 30வரை அமெரிக்காவில் நீளும் ஊரடங்கு…

 

 

கொரானா தீவிரத்தால் ஏப்ரல் 30வரை அமெரிக்காவில் நீளும் ஊரடங்கு… சொகுசு கப்பல்கள் திடீர் மருத்துவமனைகளாகிறது!

உலகம் முழுவதும் 7 லட்சத்து 68 ஆயிரத்து 466 பேருக்கு கொரானா வைரஸ் பரவியுள்ளது. அவர்களில் 36 ஆயிரத்து 914 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து வைரஸ் தற்போது அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வருகிறது. உலக அளவில் அமெரிக்காவில் தான் கொரானா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 969 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், நேற்று ஒரே நாளில் கொரானாவால் 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 854 ஆக உயர்ந்துள்ளது.

தொடரும் உயிரிழப்புகளை தடுக்க சமூக பரவலை நிறுத்த இப்போது உள்ள ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30வரை நீடிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்து இருக்கிறார்.

அதோடு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கடலில் மிதக்கும் சொகுசு கப்பலகளில் சிறப்பு மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு வருகிறது.

814 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன