புதன்கிழமை, மே 15
Shadow

உ.பி.யில் தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டது மனிதாபிமானமற்ற செயல்!

 

உபி.யில் தொழிலாளர்கள் மீது கிருமி நாசினி திரவம் தெளிக்கப்பட்டது மனிதாபிமானமற்ற செயல்!

உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரானா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.

கொரானா வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது.டெல்லி, மும்பை உள்பட பல்வேறு நகரங்களில்  வேலை பார்த்து வந்த  லட்சகணக்கான  மக்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி  வருகின்றனர்.

உத்தரபிரதேசம், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் லட்சகணக்கில் உள்ளனர். அவர்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இதனால் சமூக தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.

உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் இவ்வாறு சொந்த ஊர் திரும்பிய ஆயிரகணக்கானவர் மீது கொரானா அச்சத்தால் கிருமி நாசினி அடிக்கப்படுகிறது. இது தொடர்பான ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளிவந்துள்ளது.

லக்னோவிலிருந்து சுமார் 270 கி.மீ. தொலைவில் உள்ள ஊரில் வெளி மாநிலத்திற்கு சென்று திரும்பியவர்கள் மீது கிருமி நாசினி  தெளிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

வீடியோவில், பாதுகாப்பு என்ற பெயரில்  பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட புலம்பெயர்ந்தவர்கள் சாலையில் அமர்ந்திருக்க, அவர்கள் மீது  கிருமிநாசினி தெளிப்பதைக் காணலாம். பார்வையாளர்களில் சில போலீஸ்காரர்களும் உள்ளனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த செயல் மனிதாபிமானம் இல்லாதது என உபி அரசுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

இதே கருத்தை பிரியங்கா காந்தி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

642 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன