செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 15
Shadow

2வது முறையாகவும் நெகடிவ் ரிசல்ட்… டிரம்புக்கு கொரானா பாதிப்பு இல்லை!

 

 

2வது முறையாகவும் நெகடிவ் ரிசல்ட்… டிரம்புக்கு கொரானா பாதிப்பு இல்லை!

உலகையே பெரும் அச்சத்தில் ஆழ்த்தி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வரும் கொரானா வைரஸ் வல்லரசு நாடுகள் மீது பெரும் பாதிப்புகளையும் ஆயிரக்கணக்கில் உயிர் பலிகளையும் ஏற்படுத்தி வருகிறது.

இதில் கொரானா அதிகம் பாதித்த நாடுகளில் முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது கொரானா பாதிப்பால் அமெரிக்காவில் மட்டும் ஏறத்தாழ 2.50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் அனைத்து மாகாணங்களிலும் கொரானா வைரஸ் வேகமாக பரவிவருகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய சமீபத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற பலருக்கு கொரானா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனால் டிரம்ப்புக்கும் கொரானா சோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவுகள் கொரானா நெகட்டிவ் என்றே வந்திருந்தன.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இரண்டாவது முறையாக நேற்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இரண்டாவது சோதனையிலும் டிரம்புக்கு கொரானா வைரஸ் இல்லை என்றும் அவருக்கு நெகட்டிவ் வந்துள்ளது என்றும் அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையின் மருத்துவர் கான்லி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன