புதன்கிழமை, ஜூன் 10
Shadow

சீன மொழி பேசப் போகும் தனுஷின் அசுரன்!

 

 

சீன மொழி பேசப் போகும் தனுஷின் அசுரன்!

பிரமாண்டமான தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஜோடி நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்து மெகா ஹிட் அடித்த படம் அசுரன்.

தனுஷ் இளைஞராகவும், வயதானவராகவும் இரு தோற்றங்களில் நடித்திருந்தார். கென் கருணாஸ், பசுபதி, பிரகாஷ்ராஜ், வெங்கடேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கல்வி எத்தனை முக்கியம் என்பதை விளக்கும் விதமாகவும், ஆதீக்க சமூகத்தின் அடக்குமுறையை அப்பட்டமாக காட்டியது.

தனுஷ் நடித்த படங்களில் அதிக வசூல் சாதனை செய்த படம் என்ற பெயர் அசுரனுக்கு கிடைத்தது. இந்த படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அதில் வெங்கடேஷ், பிரியாமணி நடிக்கின்றனர். கன்னட மொழியிலும் அசுரன் படத்தை தயாரிக்க உள்ளனர். சிவாராஜ் குமார் நடிக்க உள்ளார்.

இந்த சூழலில் அசுரன் சீனாவிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகும் என்கிறார் தயாரிப்பாளர் தாணு.

கொரானா சிக்கல் முடிவுக்கு வந்ததும் இந்த டப் செய்யும் பணிகள் தொடங்குமாம்.

551 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன