புதன்கிழமை, ஜூன் 10
Shadow

கொரானா பிசாசுத்தனமான அசுர அடி ரஜினிகாந்த் எச்சரிக்கை அறிக்கை!

 

கொரானா கொடுத்தது பிசாசுத்தனமான அசுர அடி கவனமாக இருக்கவும் ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கை போச்சு ரஜினிகாந்த் எச்சரிக்கை!

கொரானா தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்து வரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றி.

அடிபட்ட உடனே அதிக வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரானா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது.
இதனுடைய வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்கு பல கடுமையான வேதனைகளை தரும்.

உங்கள் குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பாக வைப்பது உங்கள் அடிப்படை கடமை.

எந்த சூழ் நிலையிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், முக கவசம் அணியாமலும் இருக்காதீர்கள்.

ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கை போச்சு.

இவ்வாறு அந்த அறிக்கையில் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

 

703 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன