
கொரானாவைத் தொடர்ந்து பிளேக் சீனாவில் அடுத்தடுத்து உருவாகும் வைரஸ்கள்… அதிர்ச்சியில் உலக நாடுகள்!
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பரில் உருவான கொரானா வைரஸ் காரணமாக உலகம் முழுதும் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போனது.
கடந்த 7 மாதங்களாக பல லட்சம் மக்களை உயிர்பலி வாங்கிக் கொண்டிருக்கிறது கொரானா.
இதை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த வைரசின் முதல் அலையில் இருந்து சில மாதங்களுக்கு முன் மீண்ட சீனாவில் மீண்டும் கொரானாவின் இரண்டாம் அலைத் தாக்குதல் நடத்த தொடங்கி இருக்கிறது.
இதன் காரணமாக பல மாகாணங்கள் ஊரடங்கில் உள்ளன.

இந்த சூழலில் அங்கு மீண்டும் ஒரு மற்றொரு அதிர்ச்சியாக கொடூர பிளேக் நோயும் பரவத் தொடங்கி உள்ளது தெரிய வந்துள்ளது சீனாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சீனாவின் மங்கோலியா தன்னாட்சி பிரதேசத்துக்கு உட்பட்ட பயன்னார் நகரில் இந்த நோய் பாதிப்பில் ஒருவர் இருப்பது நேற்று முன்தினம் கண்டறியப்பட்டது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.
பிளேக் நோய் தாக்கத்தின் எதிரொலியாக, பயன்னார் நகரம் முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.
மக்கள் அனைவரும் சுய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நகர நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இந்த உஷார் நிலை இந்த ஆண்டு இறுதிவரை தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரானா வைரசை தொடர்ந்து சீனாவில் பிளேக் நோய் கண்டறியப்பட்டிருப்பது உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
