ஞாயிற்றுக்கிழமை, மே 3
Shadow

முதல்வர் வேட்பாளர் அடித்து ஆடிய ஓபிஎஸ்… பதிலடி கொடுத்த இபிஎஸ் முடிவுக்கு வராமல் முடிந்த கூட்டம்!

 

அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்! ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி காரசார வாதம்!?

முதலமைச்சர் பதவி கிடைத்தது குறித்து செயற்குழுவில் ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே நேரடியாக வாதம் நடைபெற்றதாக தகவல்கள் கூறுகிறது.

அதோடு, 2021 வரை மட்டுமே முதலமைச்சராக இபிஎஸ்சை ஏற்றுக் கொள்வதாக கூறியே ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருவதாக ஓபிஎஸ் கூறியதாகவும் தகவல்

கடந்த 3 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சி செய்து வருவதாக பிரதமரே பாராட்டியுள்ளார் என ஓபிஎஸ்க்கு இபிஎஸ் பதில் அளித்ததாக தகவல்

மக்கள் உங்களை முதலமைச்சராக்கவில்லை, சசிகலா தான் முதலமைச்சராக்கியதாக இபிஎஸ்சுக்கு ஓபிஎஸ் பதில் கூறியதாகவும் தகவல்

அதே நேரம், “என்னை முதலமைச்சராக்கியது ஜெயலலிதா என்றும் இபிஎஸ்சை முதலமைச்சராக்கியது சசிகலா” என்றும் ஓபிஎஸ் பேசியதாக தகவல்

அதற்கு “என்னை மட்டும் அல்ல ஓபிஎஸ்சை முதலமைச்சராக்கியதும் சசிகலா” தான் என்று எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதிலடி கொடுத்தார் என்றும் தகவல்

யாரை, யார் முதலமைச்சராக்கினார் என்பது தற்போது முக்கியம் இல்லை, நல்லாட்சி கொடுத்து வருவது யார் என்பது தான் முக்கியம் – இபிஎஸ்

தற்போதைய அரசுக்கு மட்டுமே துணை முதலமைச்சராக இருக்க ஒப்புக் கொண்டேன் என ஓபிஎஸ் பேசியதாகவும் தகவல்

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான காரசார விவாதத்தை தொடர்ந்து வரும் 7ந் தேதி முதலமைச்சர் வேட்பாளரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு.

364 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன