வியாழக்கிழமை, ஜூன் 11
Shadow

தாதாசாகேப் பால்கே தென்னிந்தியா விருதில் சிறந்த நடிகை ஜோதிகா, சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த பல்துறை நடிகர் அஜித் அறிவிப்பு !

தாதாசாகேப் பால்கே தென்னிந்தியா விருதில் சிறந்த நடிகை ஜோதிகா, சிறந்த நடிகர் தனுஷ், சிறந்த பல்துறை நடிகர் அஜித் அறிவிப்பு

2020ஆம் ஆண்டின் தாதாசாகேப் பால்கே தென்னிந்தியா விருதுகள் சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த விருது அறிவிப்பில் டூலெட் திரைப்படத்திற்கு சிறந்த திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும், அசுரன் திரைப்படத்தில் சிறப்பாக நடித்த நடிகர் தனுஷ் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ராட்சசி திரைப்படத்தில் சிறப்பாக நடித்த நடிகை ஜோதிகா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும், சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சிறந்த பல்துறை நடிகருக்கான விருது நடிகர் அஜித் குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
என்பதும்,
ஒத்த செருப்பு படத்தை இயக்கிய இயக்குநர் பார்த்திபன் சிறந்த இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
322 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன