திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

இன்றைய ஒரு வரி செய்திகள்

 

 

இலங்கை கடற்படை கைது செய்த 21 மீனவர்கள், 2 விசைப்படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, சிறுவாணி குடிநீர் திட்டப்பயனாளிகளுக்கு தடையின்றி குடிநீர் வழங்கிட, சிறுவாணி அணையில் நீர் சேமிப்பை பராமரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம்.

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பை மறுஆய்வு செய்ய தற்போது அவசியமில்லை.
மத்திய நீர்வள குழுமத்தின் நிலை அறிக்கைக்கான தமிழக அரசின் பதில் மனு வரும் 4-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் – அமைச்சர் துரைமுருகன்.

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 16,096 பேருக்கு கொரோனா , 35 பேர் உயிரிழப்பு.

மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை , தமிழ்நாட்டிற்கான புதிய ரயில் திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இல்லை – தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின்.

வார்த்தை அலங்காரங்கள் நிறைந்த ஒன்றிய பாஜக அரசின் வழக்கமான நிதிநிலை அறிக்கை இது , கோதாவரி – பெண்ணாறு – காவிரி நதி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படாதது கவலை அளிக்கிறது – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு அரசின் சார்பில் ஒன்றிய அரசிடம் கோரிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு இல்லை.ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவு என மாநில அரசு உரிமைகளில் தலையிடும் திட்டத்தை நிதியமைச்சர் அறிவித்திருக்கிறார் – தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

விவசாயிகளின் வருமானத்தில் தொடர்ந்து ஏற்றம் காணப்படும் என ஆய்வறிக்கையில் கணிப்பு – தலைமை பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன்.

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் வரி சலுகை குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை , வருமான வரி சலுகைகள், ஜி.எஸ்.டி. சலுகைகள் இல்லாமல் ஒன்றிய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது – முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

முதுகலை மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு நேரடி முறையில் நடைபெறும்.பிப்ரவரி 15ஆம் தேதிக்கு பிறகு அட்டவணை வெளியிடப்படும் – அண்ணா பல்கலை.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க மாவட்ட வாரியாக தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்.சென்னை மாநகராட்சிக்கு மணிகண்டன், ஜான் லூயிஸ், தட்சிணாமூர்த்தி ஆகியோர் நியமனம் – தேர்தல் ஆணையம்.

எல்.ஐ.சி. பங்கு விற்பனை, தனியார் மயம், தனி நபர் வருமான வரம்பில் மாற்றம் இல்லாதது உள்ளிட்ட அம்சங்கள் கவலையளிக்கின்றன – அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

நாளை காலை 11 மணிக்கு பட்ஜெட் பற்றி விரிவாக பேசுகிறேன் – பிரதமர் மோடி.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை பிற்பகல் 3.15 மணியளவில் நடைபெறுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு – மாநில தேர்தல் ஆணையம்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்.

பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுகிறது ஐ.பி.எல். போட்டிக்கான மெகா ஏலம்; 590 கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய ஏலப் பட்டியலையும் வெளியிட்டது பிசிசிஐ.

நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் பட்ஜெட்.நிதிநிலை அறிக்கையில் ந‌திநீர் இணைப்பு திட்டங்களுக்கு உயிரூட்டியுள்ள பிரதமருக்கு நன்றி சிறப்பான முறையில் பட்ஜெட் வழங்கிய நிதியமைச்சருக்கு வாழ்த்துகள் – ஈபிஎஸ்.

சொந்த வேலையையே செய்ய தெரியாத ஒருவரின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள மாட்டேன் : ‘ஜீரோ பட்ஜெட்’ என விமர்சித்த ராகுல்காந்திக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி.

காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக பாஜகவினர் 34 பேருக்கு எதிரான வழக்கு ரத்து : யூடியூபர் மாரிதாசை கைது செய்ய விடாமல் காவல்துறையினரை தடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம்.

உலக நாடுகளுக்கே முன்னுதாரணமாக பட்ஜெட் அமைந்துள்ளது.வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட் – தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

₹20 லட்சம் அடிப்படை விலையில் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இடம் பெற்றுள்ளார் அர்ஜுன் டெண்டுல்கர்.

150 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன