வியாழக்கிழமை, ஏப்ரல் 25
Shadow

பாண்டி முதல்வர் ரங்கசாமியுடன் கைகோர்த்து பாஜகவை எதிர்த்து ”பாண்டி” ஆட தயாரான விஜய்!

 

நடிகர் விஜய் உடன் புதுச்சேரி முதல்வர் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பு நடிகர் விஜய்-ன் பனையூர் வீட்டில் நடைபெற்றுள்ளது.

இப்போதைக்கு நேரடி அரசியல் இல்லை என்றாலும் நடிகர் விஜய் செயல்பாடுகளும் அவரது ரசிகர்களின் செயல்பாடுகளும் வருங்கால அரசியல் பாதைக்கு விஜய் தயார் ஆவதை சொல்லாமல் சில்கிறது.

நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் பல மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் திமுக வெற்றிக்காக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இப்போது நடைபெற உள்ள  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் களமிறங்கி உள்ளது. ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வெற்றிகளை பெற்றிருந்தனர்.

அவர்கலை தனது பண்ணை வீட்டுக்கு அழைத்து விஜய் விருந்து வைத்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்த்க்கது. அதைப் போலவே,  நடைபெற உல்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றிகளை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இசிஆர் சாலையில் உள்ள பனையூரில் உள்ள விஜய் வீட்டுக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி நேற்று முன் தினம் மாலை திடீரென வந்து, விஜயை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது.

 

 

சந்திப்பு முடிந்து வெளியே வந்த முதல்வர் ரங்கசாமி,  “இயல்பான வழக்கமான சந்திப்புதான்.  விஜய் நல்ல நண்பர். வழக்கமாக பேசுவேன். வேறொன்றுமில்லை” என்று குறிப்பிட்டு விட்டு சென்றுவிட்டார்.

புதுச்சேரியில் விரைவில்  உள்ளாட்சித்தேர்தல் வர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ரங்கசாமி விஜயை சந்தித்து பேசியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே பாஜகவுடன் சுமூகமான உறவு இல்லாத நிலையில், விஜய் மக்கள் இயக்கத்துடன் எதிர்காலத்தில் என்ஆர் காங்கிரஸ் தலைவர்  ரங்கசாமி கைகோக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை நிர்வாகியான புஸ்சி ஆனந்த் புதுவையை சேர்ந்தவர். அந்த வகையில் புதுவையில் இருது தனது அரசியல் ஆட்டத்தை தொடங்க விஜய் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பாஜக அரசால் வருமான வரி சோதனை உட்பட  விஜய் பல்வேறு வகையில் நெருக்கடிகளை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்த்க்கது. அதிலும் படப்பிடிப்பில் இருது குற்றவாளி போல போலீஸ் வாகனத்தில் வலுக்கட்டாயமாக அழைத்துவந்ததை விஜய் அத்தனை சீக்கிறத்தில் மரந்திருக்க மாட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான நண்பர்கள்.

எது எப்படியோ பாஜகவுடன் “அரசியல் பாண்டி” ஆட விஜய் தயாரானது தமிழ்க அரசியலிலும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதை மறுப்பதிற்கில்லை.

 

124 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன