திங்கட்கிழமை, மே 13
Shadow

மாஸ்க் இனி வேண்டாமாம் மூக்கை மறைக்கும் “கோஸ்க்” அணிந்தா போதுமாம் – இது தென் கொரியா கலாட்டா

 

தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கொரோனா பரவலை தடுக்க மூக்கை மட்டும் மறைக்கும் வகையிலான புதிய வகை மாஸ்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கு கோஸ்க் (Kosk) என்று பெயரிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள மாஸ்க் அணிவது, கைகளை சானிட்டைசர் மூலம் சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது ஆகிய நடமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

மாஸ்க்கை பொறுத்தவரை சர்ஜிக்கல் மாஸ்க், என்95 மாஸ்க் என பல்வேறு மாஸ்க்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுபோல, தங்கத்திலான மாஸ்க், விதவிதமான ஃபேன்சி மாஸ்க்களும் வெளியாகி கவனத்தை ஈர்த்தன.

இந்நிலையில், தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று, மூக்கை மற்றும் மறைக்கும்வகையிலான புதிய வகையான மாஸ்க்கை அறிமுகம் செய்துள்ளது.

இதற்கு கோஸ்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. மூக்கு என பொருள் தரும் ‘கோ’ என்ற கொரியன் சொல்லையும் மாஸ்க் என்ற ஆங்கில சொல்லையும் இணைத்து இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அதெல்லாம் சரி… இந்த பாழப்போன வைரசை ஒழிக்க எந்த டாஸ்க் வைச்சாலும் எந்த நாடும் ஜெயிக்கலியேன்னு அப்பாவி ஜனங்க புலம்புறத எங்க போய் சொல்றது.

141 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன