ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 28
Shadow

Tag: Mask

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்- அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்- அரசு அதிரடி அறிவிப்பு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடியில் கடந்த 3 நாட்களில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மக்கள் மீண்டும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் இன்று முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகங்களுக்கு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசிகளை மக்கள் தவறாமல் செலுத்திகொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் பிற மாநிலங்களிலும் தற்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டிலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ...
மாஸ்க் இனி வேண்டாமாம் மூக்கை மறைக்கும் “கோஸ்க்” அணிந்தா போதுமாம் – இது தென் கொரியா கலாட்டா

மாஸ்க் இனி வேண்டாமாம் மூக்கை மறைக்கும் “கோஸ்க்” அணிந்தா போதுமாம் – இது தென் கொரியா கலாட்டா

HOME SLIDER, NEWS, உலக செய்திகள்
  தென் கொரியாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று கொரோனா பரவலை தடுக்க மூக்கை மட்டும் மறைக்கும் வகையிலான புதிய வகை மாஸ்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு கோஸ்க் (Kosk) என்று பெயரிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலில் இருந்து தற்காத்துக்கொள்ள மாஸ்க் அணிவது, கைகளை சானிட்டைசர் மூலம் சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, தடுப்பூசி செலுத்திக்கொள்வது ஆகிய நடமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மாஸ்க்கை பொறுத்தவரை சர்ஜிக்கல் மாஸ்க், என்95 மாஸ்க் என பல்வேறு மாஸ்க்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுபோல, தங்கத்திலான மாஸ்க், விதவிதமான ஃபேன்சி மாஸ்க்களும் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இந்நிலையில், தென் கொரியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனம் ஒன்று, மூக்கை மற்றும் மறைக்கும்வகையிலான புதிய வகையான மாஸ்க்கை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு கோஸ்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. மூக்கு ...
குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை: மத்திய அரசு

குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை: மத்திய அரசு

helth tips, HOME SLIDER, NEWS, politics, செய்திகள்
  கொரோனாவின் 3-வது அலை சிறுவர்-சிறுமிகளையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் சிறார் தொடர்பான திருத்திய கொரோனா வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:- * 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முக கவசம் தேவை இல்லை. 6-11 வயதிற்குட்பட்டவர்கள், பெற்றோரின் நேரடி மேற்பார்வையின் கீழ் பாதுகாப்பாகவும், சரியான முறையிலும் குழந்தையின் திறனை பொறுத்து முக கவசம் அணியலாம். 12 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் பெரியவர்களை போல முக கவசம் அணிய வேண்டும். * கொரோனா, ஒரு வைரஸ் தொற்று ஆகும். தீவிரமற்ற கொரோனா தொற்றை சமாளிப்பதில் நுண்ணுயிர் எதிர்ப்பிகளுக்கு (ஆன்டிமைக்ரோபியல்) எந்தப் பங்கும் இல்லை. எனவே அறிகுறியற்ற மற்றும் லேசான பாதிப்புகளுக்கு சிகிச்சை அல்லது நோ...
மக்களே உஷார்.. மாஸ்க் போடலைன்னா அதிக தண்டம் அழுவனும்!

மக்களே உஷார்.. மாஸ்க் போடலைன்னா அதிக தண்டம் அழுவனும்!

HOME SLIDER, NEWS, செய்திகள்
    மக்களே உஷார்.. மாஸ்க் போடலைன்னா அதிக தண்டம் அழுவனும்! முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராத தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராத தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது கொரோனா நடைமுறைகளை கடைப்பிடிக்காத பொதுமக்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காத பொதுமக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள், போலீஸார் தலா ரூ.200 அபராதம் வசூலித்து வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் முகக் கவசம் அணியாமல் இருப்பவர்களுக்கு அபராத தொகை 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மாஸ்க் அணிய தேவையில்லை!

அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர் மாஸ்க் அணிய தேவையில்லை!

HOME SLIDER, NEWS, உலக செய்திகள், செய்திகள்
அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டோர்  அணிய தேவையில்லை! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடம் வகிக்கும்  நாடு அமெரிக்கா. கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகத் தடுப்பூசி போடும் பணியும் அந்நாட்டில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால் சமீப காலமாக அங்கு நோய்த்தொற்று பரவல் குறைந்து வருகிறது. கொரோனா பரவல் உச்சத்திலிருந்த சமயத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் மாஸ்க் அணிவதில் அங்கு புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், கொரோனா தடுப்பூசியை முழுமையாக எடுத்துக் கொண்டவர்கள் கட்டாயமாக மாஸ்க் அணிய தேவையில்லை. 6 அடி சமூக இடைவெளியைப் பின்பற்ற தேவையில்லை என அமெரிக்கா நோய்க்கட்டுப்பாட்டு தடுப்பு அமைப்பு அறிவித்துள்ளது. ஒன்றிய, மாநில, உள்ளூர், எல்லைக்குட்பட்ட சட்டங்கள் நடைமுறையில் உள்ள பகுதிகள் முகக்கவ...
முகக்கவசம் அணியவில்லையா… அப்ப அபராதம் கட்டு!

முகக்கவசம் அணியவில்லையா… அப்ப அபராதம் கட்டு!

HOME SLIDER, NEWS, செய்திகள்
  தமிழகத்தில் கொரோனா தொற்று மிகவும் சிறப்பான வகையில் கட்டுப்படுத்தப்பட்டது. இதனால் தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 500-க்கு கீழ் பதிவானது. இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களாக தினந்தோறும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை, திருச்சி போன்ற நகரங்களில் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களாக 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இதனால் தலைமை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது முகக்கவசம் அணியவில்லை அபராதம் விதிக்கலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள் மீதும் அபராதம் விதிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். ...
ஆதிராஜன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த்தேவா இசையில் மிரட்டலாய் வரப்போகும் “மாஸ்க்”

ஆதிராஜன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த்தேவா இசையில் மிரட்டலாய் வரப்போகும் “மாஸ்க்”

CINI NEWS, HOME SLIDER, MOVIES, சினி நிகழ்வுகள், செய்திகள், திரைப்படங்கள், நடிகர்கள்
  ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் 101வது படம்: ஆதிராஜன் தயாரித்து இயக்கும் "மாஸ்க்" ! தமிழ்த் திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமான "சிலந்தி" வெற்றிப் படத்தை இயக்கிய ஆதிராஜன், ரணதந்ரா(கன்னடம்), அருவா சண்ட படங்களைத் தொடர்ந்து கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் நான்காவது படம் "மாஸ்க்". நோயாளிகளை பணம் காய்க்கும் மரமாகவே பார்க்கும் சில மனசாட்சியற்ற மருத்துவர்களால் ஏற்படும் விபரீத நிகழ்வுகளும் அதனால் உருவாகும் பாதிப்புகளையும், எதிர்விளைவுகளையும் பரபரப்பாக சொல்லும் கதைக்கு, நொடிக்கு நொடி பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இன்றைய நாகரீக சமுதாயத்தை சிந்திக்கத் தூண்டும் வகையில் அழுத்தமான கருத்துக்களையும் ஆவேசமாகப் பேசும் அதிரடி த்ரில்லர் படமாக உருவாகிறது "மாஸ்க்". கதாநாயகன் கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகிறார...