திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி நகராட்சி வார்டு கவுன்சிலர் பதவியை விஜய் மக்கள் இயக்க நிர்வாகி கைப்பற்றி உள்ளது.
அதிமுக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பை இழக்க செய்து தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது விஜய் மக்கள் இயக்கம்.
இந்த வெற்றிக்கு காரணமான வாக்காளர்களுக்கு வீடுதோறும் சென்று காலில் விழுந்து நன்றி தெரிவித்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.
பொன்னேரி நகராட்சி 16 வது வார்டிற்கு நடைபெற்ற தேர்தலில்
விஜய் மக்கள் இயக்க நிர்வாகி சிலம்பரசன் என்பவரின் மனைவி மணிமாலா சுயேட்சையாக போட்டியிட்டு 337 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க கூட்டணி புரட்சிபாரதம் இரட்டை இலை சின்னத்தில் லதா என்பவர் 142 வாக்குகளுடன் இரண்டாம் இடமும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வினோபா 140 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றார்....
நடிகர் விஜய் உடன் புதுச்சேரி முதல்வர் திடீரென சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பு நடிகர் விஜய்-ன் பனையூர் வீட்டில் நடைபெற்றுள்ளது.
இப்போதைக்கு நேரடி அரசியல் இல்லை என்றாலும் நடிகர் விஜய் செயல்பாடுகளும் அவரது ரசிகர்களின் செயல்பாடுகளும் வருங்கால அரசியல் பாதைக்கு விஜய் தயார் ஆவதை சொல்லாமல் சில்கிறது.
நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் பல மாவட்டங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் திமுக வெற்றிக்காக பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இப்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் களமிறங்கி உள்ளது. ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வெற்றிகளை பெற்றிருந்தனர்.
அவர்கலை தனது பண்ணை வீட்டுக்கு அழைத்து விஜய் விருந்து வைத்து ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்த்க்கது. அதைப் போலவே, நடைபெற உல்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றிகளை கைப்பற்றும் என எதிர...
அரசியலை தனக்கு அணுக்கமான துறையாக விஜய் கருதுகிறார்.
தன் படங்களிலிருந்தே அரசியலுக்கான விதைகளை தூவி வரும் விஜய்,
அண்மையில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் 'விஜய் மக்கள் இயக்கத்தை' களமிறக்கி அரசியல் ஆழம் பார்த்தார்.
அதில் விஜய்க்கு நல்ல பலனும் கிடைத்தது.
இத்தனைக்கும் அந்த தேர்தலில் விஜய்யின் புகைப்படமோ,
விஜய் மக்கள் இயக்கத்தின் கட்சி கொடியோ பயன்படுத்த கூடாது என்ற அறிவிப்பு இருந்தபோதிலும் 169 இடங்களில் களமிறங்கி 121 இடங்களை தட்டி தூக்கினர்.
இதில் அரசியல் தளத்தில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையேயும் கவனம் ஈர்த்தது.
இந்த தேர்தல் வெற்றி விஜய்க்கு உற்சாகத்தை அளித்திருக்க கூடும்.
அடுத்தடுத்த தேர்தல்களில் களம் காண இந்த தேர்தல் பலமான கடைக்கால் அமைத்துள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களை நேரில் சந்தித்து விஜய் வாழ்த்தியதாக ச...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னத்தை வழங்க மாநில தேர்தல் ஆணையம் நிராகரிப்பு செய்துள்ளது.
தமிழகத்தில் பிப்ரவரி-19ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கென பல கட்சிகளும் தங்களை தயார்படுத்திக்கொண்டு வருகிறது.
இதில் விஜய் மக்கள் இயக்கத்தினை சார்ந்தவர்கள் தங்களுக்கென்று பொதுவாக ஆட்டோ சின்னத்தினை வழங்க கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் இவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்த மாநில தேர்தல் ஆணையம், அவர்களுக்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளது
...
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில், விரைவில் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை மாநில அரசும், மாநில தேர்தல் ஆணையமும் முடுக்கிவிட்டுள்ளன.
இதுதொடர்பான அனைத்துக் கட்சி கூட்டமும் சென்னையில் நடைபெறுகிறது.
ஜனவரி 24 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் வர இருப்பதால், அ
தற்கு முன்கூட்டியே ஜனவரி 22 ஆம் தேதி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட மாநில தேரதல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்த தேர்தலிலும் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் சுமார் 150க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த மன்ற உறுப்பினர்கள் போட்டியிட்டனர். அதில் 120 பேர் வார்டு உறுப்பினர்கள், ஊராட்...
கர்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை - விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாடு!
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக பொதுப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், பெரும்பாலான ஆம்புலன்ஸ்கள் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இதனால், கா்ப்பிணிகளுக்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.
இந்நிலையில், கொரோனா பொதுமுடக்க காலம் வரை மயிலாடுதுறை அரசு பெரியாா் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காகவும், மகப்பேறு முடிந்து தாய், சேயை வீட்டிற்கு இலவசமாக அழைத்துச் செல்லவும் 2 காா்களை இலவசமாக பயன்படுத்த விஜய் ரசிகா் மன்றத்தினா் வழங்கினா்.
விஜய் மக்கள் மன்ற மாவட்ட தலைவா் சி.எஸ். குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மருத்துவமனை குடிமுறை மருத்துவ அலுவலா் ஆா்.ராஜச...