வியாழக்கிழமை, ஆகஸ்ட் 27
Shadow

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா- சுமி நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி!

 

உக்ரைனின் சுமி நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர்.

எல்லைப் பிரச்னையால் ரஷ்யா – உக்ரைன் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்யா குண்டுமழை பொழிவதால் சேதங்கள் அதிகரித்துள்ளன.

கீவ் நகர் அருகே உள்ள சயோட்மையர் பகுதியில் ரஷ்யா நடத்திய தாக்குதலில், பெட்ரோல் கிடங்கில் தீப்பற்றியது.

சுமி நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஏராளமான கட்டடங்கள் குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் தீக்கிரையாயின

மைக்கோலைவ் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட தீ விபத்தால் 4 பேர் உயிரிழந்தனர். இதேபோல் கார்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலால், அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்தன

 

432 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன