சனிக்கிழமை, மே 2
Shadow

தோளில் எந்திர துப்பாக்கியை சுமந்தபடி கையில் குழந்தையை பிடித்துக் கொண்டு செல்லும் உக்ரைன் பெண்!

 

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள படையெடுப்பு என்பது, உலக மக்களுக்கு கடந்த கால போர் சம்பவங்களை நினைவூட்டி வருகிறது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் மாபெரும் யுத்தமாக இது பார்க்கப்படுகிறது.

உக்ரைனில் ரஷிய ராணுவம் நிகழ்த்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதல் நிகழ்வுகள் தான், சர்வதேச அளவில் அண்மைக் காலமாக தலைப்புச் செய்திகளாக இருக்கின்றன.

போரில் குடியிருப்பு பகுதிகளும் தாக்கப்பட்டு வரும் சூழலில், ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம், கூட்டமாக நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.

அதேசமயம், ஜார்ஜியன் பாரா மிலிட்டரி திட்டத்தின்படி தன்னார்வலர்களும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கேற்கலாம் என்று உக்ரைன் அரசு அறிவித்தது.

அதன் அடிப்படையில் உக்ரைன் ஆண்கள் பலர் கைகளில் ஆயுதங்களை ஏந்தி, ரஷ்ய படைகளுக்கு எதிராக களமிறங்கியுள்ளனர்.

இந்த செய்திகளை தொடர்ந்து, தற்போது வெளிவந்திருக்கும் தகவல் உலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

உக்ரைனில்  சாலையை கடந்து செல்லும் பெண் ஒருவர் இடது தோளில் துப்பாக்கியை தொங்கவிட்டபடி , வலது கையில் ஒரு குழந்தையையும் அழைத்து செல்லும் காட்சி சர்வதேச அரங்கில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

390 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன