சனிக்கிழமை, மே 2
Shadow

Tag: russia vs ukraine war live

Ukraine war சமாதான தூதுவராக இந்தியா செயல்படலாம் – ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் கருத்து

Ukraine war சமாதான தூதுவராக இந்தியா செயல்படலாம் – ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் கருத்து

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே தீவிரமாக போர் நடைபெற்று வரும் சூழலில், இந்த விவகாரத்தில்  சமாதான தூதுவராக இந்தியா செயல்படலாம் என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரோ கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி தாக்குதல் நடத்த தொடங்கியது. போரை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உலகநாடுகள் வலியுறுத்திய போதிலும், ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே, சமாதானத்தை ஏற்படுத்த பெலாரஸ் நாடு முயற்சி மேற்கொண்ட நிலையில், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போரை நடத்துகிறது. இவ்வாறு உக்ரைன் சேரும்பட்சத்தில் அது தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ரஷ்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது இந்த இரு நாடுகளுக்கும் இந்த...
தோளில் எந்திர துப்பாக்கியை சுமந்தபடி கையில் குழந்தையை பிடித்துக் கொண்டு செல்லும் உக்ரைன் பெண்!

தோளில் எந்திர துப்பாக்கியை சுமந்தபடி கையில் குழந்தையை பிடித்துக் கொண்டு செல்லும் உக்ரைன் பெண்!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள படையெடுப்பு என்பது, உலக மக்களுக்கு கடந்த கால போர் சம்பவங்களை நினைவூட்டி வருகிறது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் மாபெரும் யுத்தமாக இது பார்க்கப்படுகிறது. உக்ரைனில் ரஷிய ராணுவம் நிகழ்த்தி வரும் கண்மூடித்தனமான தாக்குதல் நிகழ்வுகள் தான், சர்வதேச அளவில் அண்மைக் காலமாக தலைப்புச் செய்திகளாக இருக்கின்றன. போரில் குடியிருப்பு பகுதிகளும் தாக்கப்பட்டு வரும் சூழலில், ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம், கூட்டமாக நாட்டை விட்டு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். அதேசமயம், ஜார்ஜியன் பாரா மிலிட்டரி திட்டத்தின்படி தன்னார்வலர்களும் ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கேற்கலாம் என்று உக்ரைன் அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் உக்ரைன் ஆண்கள் பலர் கைகளில் ஆயுதங்களை ஏந்தி, ரஷ்ய படைகளுக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். இந்த செய்திகளை தொடர்ந்து,...
Ukraine War – அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

Ukraine War – அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

HOME SLIDER, politics, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  மாஸ்டர் கார்டு மற்றும் விசா நிறுவனங்களை தொடர்ந்து அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கார்டும், தங்களது சேவையை ரஷ்யாவில் நிறுத்தியதால் அந்நாட்டின் பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட உள்ளது. மேலும், அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவின் பங்குச்சந்தைகள் ஐம்பது சதவீதம் சரிவைச் சந்தித்தது. ரஷ்யாவின் நாணயமான ரூபிளும் வரலாறு காணாத அளவுக்கு மதிப்பை இழந்துள்ளது. ஆப்பிள், போயிங், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், கூகுள், டிவிட்டர், சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் த...
ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிப்பதால் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு பட்டியலில் இருந்து நீக்கி புதின் உத்தரவு!

ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிப்பதால் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு பட்டியலில் இருந்து நீக்கி புதின் உத்தரவு!

HOME SLIDER, NEWS, politics, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் விவகாரத்தில் பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்துவரும் சூழலில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளை ரஷ்யாவின் நட்பு பட்டியலில் இருந்து நீக்கி புதின் உத்தரவிட்டுள்ளார். அமைதி நடவடிக்கை எனக் கூறி உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் 13வது நாளை எட்டியுள்ளது. இதுவரை 2 முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படவில்லை. இதனிடையே உக்ரைன் சரண் அடையும்வரை போரை நிறுத்தப் போவதில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது. ...
உக்ரைன் அகதிகளுக்கு 20 மில்லியன் டாலர் நிதி கொடுத்து உதவிக்கரம் நீட்டும் இங்கிலாந்து ராணி!

உக்ரைன் அகதிகளுக்கு 20 மில்லியன் டாலர் நிதி கொடுத்து உதவிக்கரம் நீட்டும் இங்கிலாந்து ராணி!

HOME SLIDER, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  உக்ரைன் அகதிகளுக்கு உதவுவதற்காக இங்கிலாந்து ராணியான இரண்டாம் எலிசபெத் நன்கொடை வழங்கியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ஏவுகணை மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி ரஷ்யா முற்றிலும் சேதப்படுத்தி வருகிறது. ரஷ்யா மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் மற்றும் பிற கட்டுப்பாடுகளை விதித்து வரும் உலக நாடுகள், உக்ரைனுக்கு பலவகையிலும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. கடனுதவி, ஆயுதங்கள், படை வீரர்கள், இணைய வசதி, உணவு, தண்ணீர் என பல வகையிலும் உக்ரைனுக்கு உதவிகள் குவிந்து வருகிறது. இதனிடையே குடியிருப்பு பகுதிகளிலும் ரஷ்ய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருவதால் லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனை விட்டு வெளியேறி, அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த 7 நாட்களில் மட்டும் 13 லட்சத்திற்கும் அதிகமான மக்...
உக்ரைன் ரஷ்யா போரால் வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டுமாம் ஐ நா சபை தகவல்!

உக்ரைன் ரஷ்யா போரால் வெளியேறும் அகதிகளின் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டுமாம் ஐ நா சபை தகவல்!

HOME SLIDER, politics, ukrain war, World News, உக்ரைன் போர், உலக செய்திகள்
  ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் ஒரு வார காலத்துக்கும் மேலாக நீடித்துவருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலின் காரணமாக அந்நாட்டின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் அந்நாட்டிலிருந்து சாரை சாரையாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவாவுக்கு குழந்தைகளுடன் ஏராளமான உக்ரேனியர்கள் சென்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போலந்தின் மெடிகா எல்லைக்கு சென்ற மக்களை அங்கு காத்திருந்த உறவினர்கள் கட்டி அணைத்து வரவேற்றனர். போருக்கு அஞ்சி லட்சக்கணக்கானோர் வெளியேறி வரும் நிலையில், உக்ரைனில் உள்ள மக்களுக்கும் ராணுவத்தினருக்கும் உதவ ஏராளமானோர் நாடு திரும்பி வருகின்றனர். போலந்தில் வாழ உக்ரேனியர்கள் சிலர் ரயில் மூலம் லீவ் மற்றும் ஒடேசா நகரங்களுக்கு வந்தடைந்தனர். ...