செவ்வாய்க்கிழமை, ஜூலை 28
Shadow

ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிப்பதால் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளை நட்பு பட்டியலில் இருந்து நீக்கி புதின் உத்தரவு!

 

உக்ரைன் விவகாரத்தில் பல்வேறு நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார தடைகள் விதித்துவரும் சூழலில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட 17 நாடுகளை ரஷ்யாவின் நட்பு பட்டியலில் இருந்து நீக்கி புதின் உத்தரவிட்டுள்ளார்.

அமைதி நடவடிக்கை எனக் கூறி உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதல் 13வது நாளை எட்டியுள்ளது. இதுவரை 2 முறை அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றும் முடிவு எட்டப்படவில்லை.

இதனிடையே உக்ரைன் சரண் அடையும்வரை போரை நிறுத்தப் போவதில்லை என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அறிவித்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.

அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் பொருளாதாரத் தடைகளால், ரஷ்யாவின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, ரஷ்யாவின் பங்குச்சந்தைகள் ஐம்பது சதவீதம் சரிவைச் சந்தித்தது. ரஷ்யாவின் நாணயமான ரூபிளும் வரலாறு காணாத அளவுக்கு மதிப்பை இழந்துள்ளது.

381 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன