புதன்கிழமை, அக்டோபர் 28
Shadow

Ukraine war சமாதான தூதுவராக இந்தியா செயல்படலாம் – ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் கருத்து

 

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே தீவிரமாக போர் நடைபெற்று வரும் சூழலில், இந்த விவகாரத்தில்  சமாதான தூதுவராக இந்தியா செயல்படலாம் என்று ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரோ கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி தாக்குதல் நடத்த தொடங்கியது.

போரை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று உலகநாடுகள் வலியுறுத்திய போதிலும், ரஷ்யா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே, சமாதானத்தை ஏற்படுத்த பெலாரஸ் நாடு முயற்சி மேற்கொண்ட நிலையில், அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

நேட்டோ மற்றும் ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா போரை நடத்துகிறது.

இவ்வாறு உக்ரைன் சேரும்பட்சத்தில் அது தங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று ரஷ்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்படுகிறது

இந்த இரு நாடுகளுக்கும் இந்தியா நட்பு நாடாக இருந்து வரும் நிலையில், ஐநாவில் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு ஆதரவு தெரிவித்து இந்தியா வாக்களிக்கவில்லை.

இதேபோன்று இந்தியா தனது செல்வாக்கை பயன்படுத்தி உக்ரைனில் உள்ள இந்தியர்களை அந்நாட்டு அரசின் உதவியோடு இந்தியாவுக்கு அழைத்து வந்தது.

இந்த நிலையில், ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரோ இந்தியா வந்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது-

இந்தியா ஒரு மிக முக்கியமான நாடு, எங்களுக்கும் உக்ரைனுக்கும் பிரச்னை நடந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியா சமாதான தூதராக செயல்படலாம். இந்தியாவின் வெளியுறவு கொள்கை பாராட்டத் தக்கது. அது நாட்டின் நலனை கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. இதே கொள்கையைத்தான் ரஷ்யாவும் கொண்டுள்ளது. இந்த வெளியுறவு கொள்கைதான் இந்தியா ரஷ்யா என 2 பெரும் நாடுகளை, நல்ல நண்பர்களாகவும், நம்பிக்குரிய கூட்டாளியாகவும் உருவாக்கியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன