சனிக்கிழமை, ஏப்ரல் 27
Shadow

கிறுக்கி கிழித்து கசக்கிப்போட்டு தூசி தட்டப்பட்ட “மாறன்” ஓவர் பில்டப்பு… தனுஷ் மாறனும் – கோடங்கி விமர்சனம்

 

ஓடிடிக்கு போற தனுஷ் படமெல்லாம் இப்படித்தான் இருக்கும் போல… கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல வந்த ஜகமே தந்திரம் இப்படித்தான் ஓவர் பில்டப்புல வந்து ஓடிடி போய் போன வேகத்துல அமுங்கி போச்சி… அடுத்ததா இந்த மாறன்…

கதைப்படி தனுஷின் அப்பாவான நேர்மையான பத்திரிகையாளர் ராம்கி ஒரு உண்மை செய்தி போட்டதால கொல்லப்படுறார்… அதே நாளில் அம்மாவும் பிரசவத்துல பெண் குழந்தைய பெத்து குடுத்துட்டு செத்துப்போறாங்க… அப்பா அம்மா இல்லமலேயே தங்கச்சிய தனுஷ் வளர்த்து ஆளாக்குறார்.

தனுஷும் நேர்மையான பத்திரிகையாளரா இருக்கார். அரசியல்வாதியான வில்லன் சமுத்திரகனியோட ஒரு உண்மைய தனுஷ் கண்டு புடிச்சதால வில்லனால ஆபத்து, இடையிலயே அமீர் ஒரு வில்லனா வரார்… திடீர்னு தங்கச்சிய யாரோ கடத்துறாங்க… தனுஷ் தங்கச்சிய காப்பாத்துனாரா… வில்லன் என்ன ஆனார்… இதுதான் மாறன் கதை…

சரி இவ்ளோ நேரம் கதைன்னு சொன்னதுல ஹீரோயின் மாளவிகான்னு ஒருத்தர் இருந்தாரே அவர் என்ன பன்னார்னு உங்கள மாதிரியே எனக்கும் சந்தேகம் வர… யோசிச்சி பாத்தா ரிச் கேள் மாதிரி ஒரு நாலஞ்சி பிரேம்ல வந்து போறார் மாளவிகா.

ஹீரோயினுக்கு இந்த நிலைமைனா… அப்ப ஹீரோ தனுஷ்…

அவர் நடிச்ச படத்துலயே இந்த மாதிரி ஒரு “டிஷூ பேப்பர்” கதைய கேட்டிருக்கவும் மாட்டார்… நடிச்சிருக்கவும் மாட்டார்… ஆனா என்னா பில்டப்பு…

அரத பழசான கிறுக்கி வேணான்னு தூக்கிப்போட்டத கதைன்னு சொல்லி தூசி தட்டி “மாறன்” ஆ மாத்தின இயக்குனர் கார்த்திக் நரேன் தான் ஹிட் அடிச்ச முதல் படமான துருவங்கள் 16 படத்த எடுத்தவரான்னு   சந்தேகம் வராம இல்ல…

இந்த கதைய கேட்டுட்டு தனுஷ் எப்படி நடிக்க வந்தாருன்னு ஒரே குழப்பமா இருக்கு… ஆனா ஒண்ணு… அப்பா அம்மா இல்லாம தம்பிய வளர்த்து ஆளாக்கினா அது மாமா ரஜினி கதை… அதே அப்பா அம்மா இல்லாம தஙச்சிய வளர்த்து ஆளாக்குனா அது மாப்ள தனுஷ் கதைன்னு வரலாறு வேணா சொல்லும்… அதே வரலாறு இதே மாதிரி பில்டப்பு கதையிலயே தொடர்ந்து நடிச்சா தனுஷயே வேணாம்னு சொன்னாலும் சொல்லும்…

வடசென்னையில கெத்தா மிரட்டின அமீர எதுக்கு இந்த கதையில கொண்டாந்தாங்கன்னு அந்த இயக்குனருக்குத்தான் வெளிச்சம்… செஞ்சது அயோக்கியத்தனம் அத நியாயப்படுத்துறது அத விட அயோக்கியத்தனம்… நடிகர் அமீர் கதாபாத்திரம் ஐய்யோ பாவம்…

ஜீ.வி.பிரகாஷ் இசை… ஒரு பாட்டும் தேறல… பின்னணி இசை சுத்தமா எடுபடவே இல்ல… மொத்தத்துல லாஜிக்னா கிலோ எவ்ளோன்னு கேக்குற படம் இது.

கதை, திரைக்கதை, நடிப்பு, இசை, பாடல்கள், எடிட்டிங் என எல்லாமே எடுபடாமல் போவதால் கோடங்கி மதிப்பீடு இந்த படத்துக்கு இல்லை…!

 

கோடங்கி

469 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன