திங்கட்கிழமை, ஏப்ரல் 29
Shadow

800 அடித்து ஆடும் படமா? கோடங்கி விமர்சனம் 3/5

 

800 அடித்து ஆடும் படமா? கோடங்கி விமர்சனம் 3/5

 

இந்திய சினிமாவில் கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையைப் பற்றிய பயோபிக்கள் நிறைய செய்யப்பட்டுள்ளன, ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் திரையில் அவரது அண்டர்டாக் முதல் சூப்பர்ஸ்டார் கதையைப் பெறுகிறார்கள். ஒரு மாற்றத்திற்காக, பெரிய திரையில் முத்தையா முரளிதரனின் கதையை 800 என்ற வடிவத்தில் சொல்ல வித்தியாசமான கதையுடன் வருகிறார் இயக்குனர் எம்.எஸ்.ஸ்ரீபதி.

முரளிதரனின் வாழ்க்கை மற்றும் அவரது சிறு வயது முதல் அவரது 800வது விக்கெட்டு வரை நடந்த சம்பவங்கள், மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிகழ்வாக அமைந்தது. மேலும் இப்படத்தின் சிறந்த அம்சம் என்னவென்றால், அவரது வாழ்க்கையில் நடந்த பல்வேறு அசம்பாவிதங்கள் – அவர் எதிர்கொள்ள வேண்டிய அரசியல், ஒரு இலங்கையர் மற்றும் ஒரு தமிழர் இடையே கயிற்றில் நடப்பதை நிரூபிக்கும் தொடர்ச்சியான போராட்டம் ஆகியவற்றிலிருந்து அது எப்படி வெட்கப்படவில்லை என்பதுதான்.

முத்தையாமுரளிதரன் வேடத்தில் நடித்திருக்கும் இந்திநடிகர் மதுரமிட்டல், தோற்றத்திலும் அவரை ஒத்திருக்கிறார்.நடிப்பிலும் நிஜ வீரர் போலவே தெரிகிறார். விளையாட்டு மட்டுமின்றி குடும்பம் மற்றும் உறவுகளுடனான காட்சிகளிலும் குறைவைக்கவில்லை.

அவருடைய மனைவி மதிமலர் வேடத்தில் நடித்திருக்கும் மகிமாநம்பியாருக்கு அதிகவேலையில்லை. வருகிற காட்சிகளில் நிறைவாக இருக்கிறார்.

இலங்கை அணியின் தலைவர் அர்ஜுனரணதுங்கா வேடத்தில் நடித்திருக்கும் கிங்ரத்னம், அப்பாவாக நடித்திருக்கும் வேலராமமூர்த்தி, அம்மாவாக நடித்திருக்கும் ஜானிகிசுரேஷ், பாட்டியாக நடித்திருக்கும் வடிவுக்கரசி ஆகியோரும் அளவாக நடித்து பலமாக இருக்கிறார்கள்.

கதைசொல்லும் பத்திரிகையாளராக நடித்திருக்கிறார் நாசர். அவருடைய நடிப்பனுவம் இந்தப்படத்துக்கு உதவியாக அமைந்திருக்கிறது.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வேடத்தில் நடித்திருக்கிறார் ஆடுகளம் நரேன். அவர் பேசும் கருத்துகளுக்கு அரங்கில் ஆரவார வரவேற்பு.

ஜிப்ரானின் இசையில் பாடல்கள் இல்லை, பின்னணி இசை பொருத்தம்.

விளையாட்டு வீரரின் வாழ்க்கைக் கதை என்றாலும், கதை நடக்கும் களம் இலங்கை என்பதால் அங்கு நடந்த விடுதலைப்போராட்டம், தமிழர்களுக்கு எதிரான கலவரம் ஆகியனவற்றைக் காட்சிப்படுத்தியும் விளையாட்டுக் காட்சிகளை அதன் விறுவிறுப்புக் குறையாமல் காட்டியும், தான், ஒரு கைதேர்ந்த ஒளிப்பதிவு இயக்குநர் என்று நிறுவியிருக்கிறார் ஆர்.டி.ராஜசேகர்.அவருடைய உழைப்பில் படத்தின் தரம் உயர்ந்துள்ளது.

எழுதி இயக்கியிருக்கும் எம்.எஸ்.ஸ்ரீபதி, முத்தையாமுரளிதரனின் வாழ்க்கைக் கதையை அப்படியே சொல்லிவிட வேண்டும் என்று முனைப்புக் காட்டியிருக்கிறார்..

மலையகத்தமிழரான அவர் தமிழீழ விடுதலைப் போராட்டம் குறித்துக் கொண்டிருந்த கருத்துகள் தமிழினத்துக்கு எதிரானவை என்பதையும் மறைக்காமல் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குறியது.

மொத்தத்தில் 800 மிகைப்படுத்தாத நிஜம்… எப்போதும் ரசனை குறைவாகவே இருக்கும்.

 

கோடங்கி 3/5

 

81 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன