புதன்கிழமை, மே 20
Shadow

ரகசியமா செய்யறது பளீச்சுன்னு தெரிஞ்சாலும் மிஷன் சாப்டர் 1 ரசிக்கலாம்- கோடங்கி விமர்சனம் 3/5

 

 

 

ரகசியமா செய்யறது பளீச்சுன்னு தெரிஞ்சாலும் மிஷன் சாப்டர் 1 ரசிக்கலாம்- கோடங்கி விமர்சனம் 3/5

பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்கிற கதைன்னு சொன்னா முன்னாடி ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், கேப்டன் விஜயகாந்த் தான் ஞாபகத்துக்கு வருவாங்க… இனிமே அந்த லிஸ்ட்ல அருண்விஜய் சேர்ந்துடுவாரு… மிஷன் சேப்டர் 1 அப்படித்தான் இருக்கு!

கதை என்ன சொல்லுதுன்னா…

உயிருக்கு ஆபதான நிலையில் தனது மகளின் அறுவை சிகிச்சைக்காக லண்டன் செல்லும் அருண் விஜய்,  அங்கே எதிர்பாரத பிரச்சனையில் சிக்கி லண்டன் சிறையில் அடைக்கப்படுகிறார்.

அந்த சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் மூன்று கைதிகளை தப்பிக்க வைப்பதற்காக பயங்கரவாத குழு மிகப்பெரிய சதிதிட்டம் தீட்டி அதை செயல்படுத்துகிறது. இதனால், சிறைச்சாலையில் இருக்கும் அனைத்து கைதிகளும் அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட, அனைவரையும் தடுத்து நிறுத்தும் அருண் விஜய், அந்த மூன்று தீவிரவாதிகளையும் அங்கிருந்து தப்பிக்க விடாமல் செய்துவிடுகிறார்.

கைதியாக சிறையில் இருக்கும் அருண் விஜய் உண்மையில் யார்?, உயிருக்கு போராடும் அவரது மகள் என்ன ஆனார்? தீவிரவாதிகள்  என்ன ஆனார்கள் என்பதை இயக்குனர் விஜய் தனக்கே உரிய ஜானரில் சொல்லியிருக்கிறார்.

மகளின் உயிரை காப்பாற்ற போராடும் ஒரு தந்தையாக அறிமுகமாகி ரசிகர்களை ஈர்க்கும் அருண் விஜய், லண்டன் சிறைச்சாலையில் ஆக்‌ஷன் அவதாரம் எடுக்கும் போது மிரட்டுகிறார்.

கிளாமார் டாலாக நடித்து அசத்தி வந்த எமிஜாக்சன் சிறைச்சாலை ஜெயிலராக வந்து சில அதிரடி காட்சிகளில் அமர்க்களப்படுத்தினாலும், பல நேரங்களில் அருண் விஜய் செய்யும் சாகசங்களை வேடிக்கை பார்க்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் பரத் போபண்ணா, சர்தார் வேடத்தில் நடித்திருக்கும் அபி ஹாசன் ரொம்ப யதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தி தனி முத்திரை பதித்து கொள்கிறார். அவரோடு, விரஜ், ஜேசன் ஷா, சிறுமி இயல் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் அளவான நடிப்பு மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

இரவு நேர காட்சிகளையும், ஆக்‌ஷன் காட்சிகளையும் சிறப்பாக காட்சிப்படுத்திய சந்தீப் கே.விஜயனின் ஒளிப்பதிவு ரசிக்க வைத்திருக்கிறது.

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் பலம். பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம்.

முதல் பாதி அமைதியாகவும், இரண்டாம் பாதி ஆக்ரோஷமான ஆக்‌ஷனாகவும் அமைந்திருக்கிறது.

மிஷன் அப்படீன்னலே ரகசியம்னு சொல்லுவாங்க… பட் காட்சிகளை பாக்கும்போது அடுத்த காட்சி இதுவாதான் இருக்கும்னு ரகசியம் முன்னாடியே தெரிஞ்சி போனாலும் சுவாரஸ்யம் மிஸ் ஆகல.

கதையில ஆளே உள்ள போறமாதிரி லாஜிக் ஓட்டைகள் அம்மாம் பெருசா இருந்தாலும் மேக்கிங்லயும், தெறிக்க விடும் ஆக்‌ஷன் காட்சிகளினாலும், பின்னணி இசையினாலும் லாஜிக் ஓட்டைகள் அடைபட்டு போயிடுது.

மொத்தத்தில், லாஜிக் பார்க்காமல் ஆக்‌ஷன் + குழந்தை செண்டிமெண்ட் காட்சிகளை ரசிப்பவர்களுக்கு இந்த ‘மிஷன் – சாப்டர் 1’ ஓகே ரகம்தான்!

 

கோடங்கி

மதிப்பீடு 3/5

 

303 Views

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன